செய்திகள் :

சாம்பியன்ஸ் டிராபி: ஸ்டார்க் விலகல்! 5 முன்னணி வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் ஆஸி.!

post image

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து தனிப்பட்ட காரணத்துக்காக மிட்செல் ஸ்டார்க் விலகியதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபையில் நடத்தப்படவுள்ளன. மற்ற அணிகளுக்கான போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில், இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகிறது.

இதையும் படிக்க : சாம்பியன்ஸ் டிராபி: பும்ரா விலகல்! இந்தியாவுக்கு பின்னடைவு!

இந்த தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்த கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளார் ஜோஸ் ஹேசில்வுட் ஆகியோர் காயம் காரணமாக ஏற்கெனவே விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக விலகுவதாக தெரிவித்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக மார்கஸ் ஸ்டாய்னிஸ் திடீரென கடந்த வாரம் அறிவித்தார்.

தற்போது தனிப்பட்ட காரணங்களுக்காக மிட்செல் ஸ்டார்க் விலகுவதாக அறிவித்துள்ளார். அணியின் 5 முன்னணி வீரர்கள் இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபியை ஆஸ்திரேலியா சந்திப்பது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணி

ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சென் அபோட், அலெக்ஸ் கேரி, பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் எங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லபுஷேன், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மேத்யூ ஷார்ட், ஆடம் ஸாம்பா.

கடைசி ஒருநாள்: இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்!

கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.3 ஆட்டங்கள் கொண்ட தொடரில், முதலிரு ஆட்டங்களில் வென்று தொடரைக் கைப்பற்றிவிட்ட இந்தியா, அதை முழுமை... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: பும்ரா விலகல்! இந்தியாவுக்கு பின்னடைவு!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.அவருக்கு பதிலாக இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டு... மேலும் பார்க்க

தொடரை முழுமையாகக் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா - இன்று கடைசி ஒருநாள் கிரிக்கெட்

இங்கிலாந்துடனான கடைசி ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா புதன்கிழமை அகமதாபாதில் மோதுகிறது.3 ஆட்டங்கள் கொண்ட தொடரில், முதலிரு ஆட்டங்களில் வென்று தொடரைக் கைப்பற்றிவிட்ட இந்தியா, அதை முழுமையாக வெல்லும் முனைப... மேலும் பார்க்க

21 சதங்கள்.. 39 அரைசதங்கள்.. 7200 ரன்கள்.. ஓய்வை அறிவித்த கேகேஆர் நட்சத்திரம்!

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஷெல்டன் ஜாக்சன் ஓய்வை அறிவித்துள்ளார். 15 வருடங்களாக விளையாடிவரும் சௌராஷ்டிரா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஷெல்டன் ஜாக்சன் செவ்வாய்க்கிழமை கிரிக்கெட்டில் இருந... மேலும் பார்க்க

நடுவர் நிதின் மேனன் விலகல்! சாம்பியன்ஸ் டிராபிக்கான நடுவர்கள் யார்? -முழு விவரம்

சாம்பியன்ஸ் டிராபிக்கான தொடரில் இருந்து இந்திய நடுவர் நிதின் மேனன் விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், சாம்பியன்ஸ் டிராபிக்கான நடுவர்கள் யார்? என்பதற்கான முழு விவரம் வெளியாகியுள்ளது.இந்தியா, பாகிஸ்தான்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: ஜேக்கப் பெத்தேல் விலகல்! மாற்று வீரர் யார்?

சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து இங்கிலாந்து அதிரடி ஆட்டக்காரர் ஜேக்கப் பெத்தேல் விலகுவதாக அறிவித்துள்ளார். இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானின் கராச்... மேலும் பார்க்க