செய்திகள் :

Valentine's Day: "எனக்கு முன்னாடி என் பொண்டாட்டிப் போயிடணும்..." - ஓர் அப்பாவின் காதல் கதை!

post image
அப்பாக்கள் காதலிச்சுக் கல்யாணம் செஞ்சாலும், அதை வளர்ந்த பிள்ளைங்ககிட்ட சொல்லவே மாட்டாங்க. எல்லாம் ஒரு பயம்தான். அதை மீறி யாராவது ஒரு அப்பா தன்னோட காதல் கதையை உள்ளது உள்ளபடி சொன்னா எப்படியிருக்கும்? அப்படிப்பட்ட ஓர் உண்மையான காதல் கதைதான் இது.

1980-களோட ஆரம்பம். இருபதுகளோட மத்தியில இருக்கிற அந்த இளைஞன் வில்லிவாக்கம் ரயில்வே ஸ்டேஷன்ல வந்து இறங்குறான். கையில ஒரு சாப்பாட்டுப் பை. ஆவடியில ஒரு கவர்ன்மென்ட் கம்பெனியில வேலைபார்க்கிற அந்த இளைஞன், நிறைமாசமா இருக்கிற தன்னோட காதல் மனைவியைப் பத்தி யோசிச்சிக்கிட்டே, ட்ரெயினை பிடிச்சு வீடு வந்து சேர, அங்கே மனைவி இல்ல. பதிலா, ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் நின்னுக்கிட்டிருந்தார். 'தம்பி, உன் வீட்டம்மா போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கு. நீயும் வந்து சேரு'ன்னு சொல்லிட்டு, அவரு சைக்கிளை உருட்டிட்டுப் போக, பதறிக்கொண்டு ஓடுகிறான் அந்த இளைஞன்.

போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல கண்ணீரோட மனைவி நிக்கிறதைப் பார்த்தவனுக்கு ஒரு நொடி உயிரே உடம்பை விட்டுப் போன மாதிரியிருக்கு. 'என்னடி ஆச்சு' என்று மனைவிகிட்ட கேட்டவனுக்கு, 'எல்லாம் எங்கப்பா செஞ்ச வேலைதாங்க'ன்னு மனைவி அழ ஆரம்பிக்கிறா. சரி அழாதே, நான் உள்ள போய் இன்ஸ்பெக்டரைப் பார்த்துட்டு வர்றேன்னு போலீஸ் ஸ்டேஷனுக்குள்ள நுழையுறான். அங்கே இன்ஸ்பெக்டருக்கு முன்னாடி இருந்த சேர்ல உட்கார்ந்திட்டிருந்தது அந்த இளைஞனோட மாமனார். கூடவே, நாலைஞ்சு அடியாட்கள். அந்த அந்த இளைஞனோட மாமனார் ஏரியாவுலேயே பெரிய பணக்காரர். ஆனா, நடவடிக்கைகள்ல ரொம்ப ரொம்ப ஏழை.

காதலர் தினம்
காதலர் தினம்

'என்னடா, இவரு பொண்ணை இழுத்துட்டு வந்திட்டியாமே'ன்னு இன்ஸ்பெக்டர் அதட்டலாக கேட்க, 'இழுத்துட்டெல்லாம் வரலை சார். முறைப்படி கூட்டிட்டு வந்துதான் கல்யாணம் செஞ்சேன். வேணும்னா, என் மாமியாரைக் கேட்டுப்பாருங்க'ன்னு கூலா பதில் சொல்றான் அந்த இளைஞன். இந்த வார்த்தையைக் கேட்டதும் உட்கார்ந்திருந்த நாற்காலியை வேகமா தள்ளி விட்டுட்டு எழுந்து நிக்கிறார் மாமனார். 'யாருமில்லாத அனாதைப் பயலுக்கு என் பொண்ணு கேக்குதாடா, பிச்சைக்காரப் பயலே'ன்னு இன்னும் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகளா தேடிப் பிடிச்சு திட்ட ஆரம்பிக்க, கூட வந்த அடியாட்கள் இவ்ளோ நேரம் மறைச்சி வெச்சிருந்த பொருளை வெளியே எடுக்கிறாங்க. இத எதிர்ப்பார்க்காத இன்ஸ்பெக்டர், 'சார், என்ன பண்றீங்க? மிரட்டி வைக்கணும்தானே சொன்னீங்க. இப்போ வேற என்னவோ பண்ணப் பார்க்கிறீங்க. தயவுசெஞ்சு வெளிய போயிடுங்க'ன்னு சத்தம் போடுறார்.

'இனி நம்ம உயிருக்கு உத்தரவாதம் இல்லைன்னு புரிஞ்சுக்கிட்ட இளைஞன் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து வொய்ஃபையும் கூட்டிக்கிட்டு பக்கத்துல இருக்கிற பொட்டிக்கடைக்குப் போய் ரெண்டு சோடா கொடுண்ணே'னு கேட்கிறான். சோடாவை வாங்கி ரெண்டையும் கீழே ஊத்திட்டு, ஒரு பாட்டில் மேல இன்னொரு பாட்டிலை வெச்சு ஒரு போடு. 'வாங்கடா, நான் எல்லாத்துக்கும் ரெடி'ன்னு சொல்லாம சொல்லிட்டு நிக்கிறவனை ஒரு நிமிஷம் கோவத்தோட பார்த்த அந்த மாமனார், தன்னோட அடிபொடிங்க கிட்ட 'இன்னிக்கு வேணாம்'னு சொல்லிட்டு காரை நோக்கி நடக்கிறார். 'மாமா சோடா குடிக்கிறீங்களா'ன்னு அந்த இளைஞன் உரக்கக்குரல் கொடுக்க, பயந்துபோன அவன் மனைவி 'ஏங்க ஆபத்தை விலை கொடுத்து வாங்குறீங்க'ன்னு சின்னக்குரல்ல சொல்ல, 'ஆயிரந்தான் இருந்தாலும் என் மாமனார்டி'ன்னு சிரிக்கிறான் அந்த இளைஞன்.

அவன் அப்படித்தான். எவ்ளோ பெரிய விஷயத்தையும் ஒண்ணுமே இல்லைங்கிற ரேஞ்சுல ஹேண்டில் பண்ணுவான். நாலு வயசுல அப்பாவைப் பறிகொடுத்து, எட்டு வயசுல அம்மாவையும் பறிகொடுத்து நின்னப்போ, அவனுக்கு முன்னாடிப் பிறந்த ரெண்டு அக்காங்க, மூணு அண்ணனுங்க வீட்ல தான் வேளைக்கு ஒரு வாய் சோறுன்னு வாழ்க்கை போயிருக்கு. ஆளுக்கு ரோஷம் அதிகம்கிறதால, அவங்க ஏவுற வேலைகளைச் செய்யப்பிடிக்காம, ஒரு டெய்லர் கடையில பட்டன் வெக்கிற, கொக்கி தைக்கிற வேலைக்குப் போக ஆரம்பிக்கிறான். அந்த டெய்லருக்கு கோவம் வந்துட்டா, பித்தளைப் பிடிப் போட்ட கத்தரிக்கோலைத் திருப்பி வெச்சு நடு மண்டையில அடிச்சிடுவாராம். அவர்கிட்ட அடி, உதை வாங்கி, தையல் பழகி, எப்படியோ சட்டை, பேன்ட் வரைக்கும் கத்துக்கிட்டார். அந்தக் கடைக்கு வரப்போக இருந்த ஒரு வசதியான வீட்டுப்பொண்ணு மேல காதல் வந்திருக்கு. அந்தப் பொண்ணு அப்போ அந்த ஏரியாவுல இருந்த ஆங்கிலோ இண்டியன் ஸ்கூல் படிச்சிட்டிருந்தாங்களாம். லவ் பண்றவனோட பேக்கிரவுண்ட் பத்தியெல்லாம் யோசிக்க தெரியாத காலகட்டம் அது.

Retro love story

காதல் வந்திடுச்சு. கல்யாணம் செய்யணும்னா, ஏதாவது வேலைக்குப் போயாகணும். அதுவும் கவர்ன்மென்ட் வேலையா இருந்தா இன்னும் கெத்தா போய் பொண்ணு கேக்கலாம்னு தேட ஆரம்பிக்கிறான். தேடுறவங்களுக்குக் கிடைக்கும்தானே. மாமனாரோட பல வீட்டு சகவாசமெல்லாம் நல்லா தெரியும்கிறதால, வேலை கிடைச்சவுடனே மாமியாரைப் பார்த்து பொண்ணு கேட்கிறான். விஷயத்தைத் தெரிஞ்சுக்கிட்ட மாமனார், 'ஒரே பொண்ணு. என் மானம் மரியாதையெல்லாம் அவ கல்யாணத்துலதான் இருக்கு. எத்தன ஆயிரம் வேணும்'னு மொதல்ல பேரம் பேசியிருக்கார். பணம் காசுக்கு மசியாத பையன்னு தெரிஞ்சதும், அடிதடி உருட்டல் மிரட்டல்னு இறங்கியிருக்கார். அதுல இருந்தெல்லாம் அந்த இளைஞன் தப்பிப் பிழைச்சது பெரிய கதை. 'இந்தாள் பொண்ணைக் கல்யாணம் பண்ணாதான், பொண்ணு விதவையாகிடக்கூடாதுன்னு நம்மளை விடுவார்'னு அவசர அவசரமா கல்யாணத்தை முடிக்கிறான். ஆனா, பொண்ணு நிறைமாசமா இருக்கிறப்போவும் மருமகன் உயிரை எடுக்க முயற்சி செஞ்சு அதையும் பொய்யாக்குறாரு அந்த பெரிய மனுஷன்.

போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல நின்ன அந்த அம்மாவோட வயித்துல இருந்தது பெண் குழந்தை. அது பிறந்து பத்து வயசு ஆகுறவரைக்குமே மருமகனைக் கட்டம்கட்ட எவ்வளவோ முயற்சி செய்யுறாரு. மருமகன் வேலையை விட்டு வர்ற டைம், வலது கையில வாட்ச் கட்ற பழக்கம்னு எல்லாத்தையும் சொல்லி ஆளுங்களை அனுப்புறாரு. இது எல்லாத்தையும் எதிர்பார்த்தே இருந்த அந்த இளைஞனோட இடுப்புல இருந்த பெல்ட் தான் பல தடவை அந்த இளைஞனைக் காப்பாத்துச்சாம். அந்த மாமனாரும் உடல் ஓய்ஞ்சு படுக்கையில விழ, அதுவரைக்கும் எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துட்டு இருந்த விதி, அதோட விளையாட்டை ஆரம்பிச்சிருக்கு. இது எதுவுமே தெரியாம குடும்பமா புல்லட்ல போயிட்டிருந்தவங்க மேல பஸ் ஒண்ணு உரச...

ரெட்ரோ காதல் கதைகள்

அந்த இளைஞன் கண் விழிச்சுப் பார்த்தப்போ, வலது காலோட பாதத்துல பாதியில்ல. குழந்தைக்கு எந்த அடியுமில்ல. ஆனா, விபத்து ஏற்படுத்துன அதிர்ச்சியில அந்த மனைவிக்குப் பழைய ஞாபகங்கள் எல்லாமே மறந்துபோச்சு. இந்த தகவலைச் சொன்ன டாக்டர்ஸ், கூடவே அவங்க கர்ப்பமா இருக்கிறதையும் சொல்றாங்க. எல்லாத்தையும் மறந்துபோன அவங்களுக்கு ரெண்டாவது பிறந்தது ஆண் குழந்தை. அப்பா மடியிலும், அக்கா மடியிலேயும்தான் அந்த ஆண் குழந்தை வளர ஆரம்பிக்குது. வீடு, ஆஃபீஸ், சமையல், ரெண்டு குழந்தைகளோட மூணாவது குழந்தையா மனைவின்னு அந்த இளைஞன் அதுக்கப்புறம் அவரோட வாழ்க்கையில சந்திச்சதெல்லாம் பொறுப்புகளும் போராட்டங்களும் மட்டும்தான்...

காலங்கள் ஓடுச்சு. அந்த இளைஞனுக்கும் வயசாச்சு. அவர் நினைச்சிருந்தா, இன்னொரு கல்யாணம் செஞ்சுட்டுப் போயிருக்கலாம். மனைவிக்கு மனநிலை சரியில்லைன்னு சட்டப்படி விவாகரத்துக்கூட வாங்கியிருக்கலாம். குறைந்தபட்சமா, திருமணம் தாண்டின உறவுலகூட இருந்திருக்க முடியும். கேக்கிற நிலைமையில மனைவிதான் இல்லையே... ஆனா, சிலரோட காதல்கள் அப்படித்தான். அதுக்கு உண்மையா நேசிக்கிறதை தவிர வேற எதுவும் தெரியாது. 'எனக்கு முன்னாடி என் பொண்டாட்டிப் போயிடணும். அவளை என் பிள்ளைங்ககிட்ட கூட விட்டுட்டுப் போக மாட்டேன்'னு சொல்லிட்டே இருப்பாரு. அவர் விருப்பப்பட்டபடியே தான் நடந்துச்சு. ஒரு காதலோட ஆழத்தைத் தெரிஞ்சுக்கணும்னா, வாழ்க்கையோட கடைசி துளி வரைக்கும் அதை அனுபவிச்சுப் பார்க்கணும். தன்னையே மறந்துட்டு வாழ்ந்த அந்தப் பெண்மணிக்கு அந்தக் கொடுப்பினை இருந்துச்சு. ஆனா, அனுபவிக்கத்தான் விதி வழி கொடுக்கல. உண்மையா காதலிச்சவங்களுக்கு, காதலிக்கிறவங்களுக்கு, காதலிக்கப் போறவங்க எல்லாருக்கும் காதலர் தின வாழ்த்துகள்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Valentine's Day: ஹார்மோன் சுரந்தா சொல்லியனுப்பு... உயிரோடிருந்தால் வருகிறேன்..!

இந்த உலகத்துல இருந்து காதலை எடுத்துட்டா என்னவாகும்? மனிதர்கள், ஆதி மனுஷங்க மாதிரி கூட்டம் கூட்டமா வாழ ஆரம்பிப்பாங்களாம். யாரும் யார்கூட வேணும்னாலும் உறவு வெச்சுப்பாங்களாம். அப்போ, நம்மளையெல்லாம் நாகரி... மேலும் பார்க்க

Valentine's Day: 'Nanoship, Situationship, Benching...' - Gen Z தலைமுறையின் காதல் மொழி தெரியுமா?

காதல் உலகப் பொது மொழி. முதல் உயிரினங்கள் தோன்றிய நாள் முதல் இன்றுவரை History always Repeats. அதே காதல், அதே வசீகரம்.இன்றைய அதிவேகமாக மாறிவரும் உலகில் நேற்றைய காதலர்களால் இன்றைய காதலர்களின் மொழியைப் பு... மேலும் பார்க்க

Valentine's Day: காதல் தரும் பிரிவால் நன்மை உண்டாகுமா? - நிபுணர்கள் சொல்லும் ஆச்சரிய தகவல்கள்!

"காதல்" அனைவருக்குமானது. இந்த காதலில் விழாதவர் அல்லது இதனை வாழ்வில் ஒருமுறையாவது அனுபவிக்காதவர் இருக்க முடியாது.காதலை எவ்வளவு தூரம் உணர்கிறார்களோ, அவ்வளவு தூரம் பிரிவின் வலியையும் உணர்கிறார்கள். காதல்... மேலும் பார்க்க

Relationship: மனைவியை கை ஓங்கும் கணவனைத் திருத்தும் 6 வழிகள்!

பெண் தன்னை கை ஓங்குவதை வாழ்நாள் அவமானமாக நினைக்கிற ஆண், தன் மனைவி என்ற ஒரே உரிமையை வைத்துக்கொண்டு பெண்ணை அடிக்கிறான். ’இந்த நூற்றாண்டுல இருந்துதான் ஆரம்பிச்சது’ என்று உறுதியாகக் கணிக்க முடியாத அநாகரிக... மேலும் பார்க்க

Bill Gates: விவாகரத்துக்கு பின் காதலி குறித்து மனம் திறந்த பில் கேட்ஸ் - யார் இந்த பவுலா ஹார்ட்?

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், பவுலா ஹர்டுடனான தனது உறவு பற்றி முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.கடந்த 2021 ஆம் ஆண்டு பில் கேட்ஸ் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்துகொண்டனர். இ... மேலும் பார்க்க