சரியும் Stock Market-ல் முதலீடு செய்வது புத்திசாலித்தனமா? | IPS finance - 136 | ...
Valentine's Day: 'Nanoship, Situationship, Benching...' - Gen Z தலைமுறையின் காதல் மொழி தெரியுமா?
காதல் உலகப் பொது மொழி. முதல் உயிரினங்கள் தோன்றிய நாள் முதல் இன்றுவரை History always Repeats. அதே காதல், அதே வசீகரம்.
இன்றைய அதிவேகமாக மாறிவரும் உலகில் நேற்றைய காதலர்களால் இன்றைய காதலர்களின் மொழியைப் புரிந்துகொள்ள முடியவில்லை. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு இன்றைய காதலர்கள் ஒருவருக்கொருவர் எப்போதும் தொடர்பில் இருக்கின்றனர். சங்க காலத்தைச் சேர்ந்தவர்களைப் போலத் தூதுவிடவும் தேவையில்லை, கடிதம் எழுதவும் தேவையில்லை. ஒவ்வொரு நொடியும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள முடியும் என்ற நிலை நிலவுகிறது.
Gen Z-ன் அகராதியில் ஏகப்பட்ட வார்த்தைகள் இருந்தாலும், இந்த Valentine's Day -வில் நம் நகரங்களில் புழக்கத்தில் இருக்கும் சில வாய்க்குள் நுழையாத ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன என்பதை அறிந்துகொள்வதின் வழியே தற்கால காதல் மொழியைப் புரிந்துகொள்ள முடியலாம்...
Love Bombing (லவ் பாம்பிங்)
ஒரு உறவில் அடியெடுத்து வைத்த உடனேயே துணையைத் தாங்குத் தாங்கெனத் தாங்குவதை இப்படிக் குறிப்பிடுகிறார்கள். அதாவது அவர்களின் சின்ன விஷயத்தில் கூட அதிக கவனம் செலுத்துவது, அவர்களுடன் அதிக நேரம் செலவிடுவது, பரிசுகள் கொடுப்பது என அன்பைப் பொழிவது.
இப்படிப்பட்டவர்கள் 'ஹினிமூன் காலகட்டம்' முடிந்த பிறகுத் துணையைக் கண்டுகொள்ளாததுபோல இருப்பர். இது உறவுக்குள் பிரச்னை ஏற்படுத்தும். ஆசை அறுபதுநாள், மோகம் முப்பது நாள் என்பார்களே அதுபோலவே... இது எல்லா ஜோடிகளுக்கும் நடக்கக் கூடியதுதான்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/aec1bk11/Newssense_article___2025_02_10T213031_971.png)
ஆனால் ஒருசில Love Bombers இருக்கிறார்கள். ஏதாவது தவறு செய்துவிட்டால் அதைச் சரி செய்யாமல் லவ் பாம்ப் செய்வார்கள். அப்போதைக்குப் பெரிதாக ஏதாவது செய்து சமாதானம் செய்துவிட்டு மீண்டும் தன் தவறுகளைத் தொடர்வார்கள். இப்படிப்பட்ட குணத்தை மாற்றிக்கொள்ளாவிட்டால், இவர்கள் பெரிய ரெட் ஃப்ளாக்ஸ்!
Red Flag, Green Flag
பொதுவாகச் சிவப்பு அபாயத்தையும் பச்சை அனுமதியையும் குறிக்கும். ஒருவரின் குணாதிசயங்களில் பிழையான விஷயங்களை Red Flag என்றும், நல்ல விஷயங்களை Green Flag என்றும் குறிப்பிடுகின்றனர்.
Affordating (அஃபார்டேடிங்)
காதல் ஜோடிகளுக்குப் படங்களில் காட்டுவதுபோல வசதியான ரெஸ்டாரண்ட்களிலும், சுற்றுலாத்தலங்களிலும், க்ளப்களிலும் டேட் செய்ய ஆசை இருக்கும். ஆனால் கல்லூரியில் படிக்கும் அல்லது கரியரின் தொடக்கத்தில் இருக்கும் காதலரின் நிதிநிலையைப் புரிந்துகொண்டு மலிவான இடங்களுக்கு ஒன்றாகச் செல்வதும், செலவுகளை இருவரும் பகிர்ந்துகொள்வதும் அஃபார்டேடிங் என அழைக்கப்படுகிறது.
Delusionship (டெலூஷன்ஷிப்)
இது காதலின் முதல் நிலை எனலாம். நாம் ஒருவருடன் உறவைத் தொடங்கும் முன்னரே, அவருடன் கற்பனையில் வாழ்வது டெலூஷன்ஷிப்.
Hot-girl summer (ஹாட்-கேர்ள் சம்மர்)
உறவில் இருக்கும் இருவரில் ஒருவரின் சந்தோஷத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது.
Nanoship (நானோஷிப்)
குறைந்த காலம் மட்டும் எந்த எதிர்பார்ப்பும், பொறுப்புகளும் இல்லாமல் காதலித்தல்.
Zombieing (ஜாம்பியிங்)
உங்களை கோஸ்டிங் செய்தவர்கள், சிறிது காலத்துக்குப் பிறகு வந்து மீண்டும் இணைய விரும்புவதாகக் கூறுவது.
Ghosting (கோஸ்டிங்)
திடீரென ஒருவரிடம் பேச்சை நிறுத்துவது. அல்லது எந்த விளக்கமும் இல்லாமல் உறவிலிருந்து விலகுவது கோஸ்டிங். பொதுவாக ஆன்லைன் டேட்டிங் அல்லது டெஸ்டிங்கில் இது நடக்கும்.
Cookie jarring (கூகி ஜாரிங்)
ஒருவர் மீது உண்மையான அன்பு இல்லாமல், ஒரு பாதுகாப்பு வலையமாக அல்லது Back up Planக்காக உறவைத் தொடர்வது.
Love Haze (லவ் ஹேஸ்)
காதலிக்கத் தொடங்கிய சிறிது காலத்திற்குப் பிறகு, துணையின் குறைகள் மட்டுமே கண்ணுக்குத் தெரிவது.
Situationship (சிட்சுவேஷன்ஷிப்)
நட்பு - காதல் இரண்டுக்கும் நடுவில் தெளிவில்லாத கோட்டில் இருப்பது. உடன் இருப்பவரிடம் என்னென்ன எதிர்பார்ப்புகள் கொண்டிருக்கலாம், இருவருக்குமான எல்லைகள் எது என்பதை அறியாமல் இருத்தல். இந்த நிலையிலிருந்து இருவரும் முதிர்ந்த காதலர்களாக மாறலாம், அல்லது தங்கள் வழிகளைப் பிரித்துக்கொண்டு தனித்தனியே பயணிக்கலாம்.
Breadcrumbing (ப்ரட்க்ரம்பிங்)
ஒருவருக்குக் காதலரைப் போலவே மெஸ்ஸேஜ் அனுப்புவது, வார்த்தைகளில் கொஞ்சுவது... அவர்மீது ஆசை (Interest) இருப்பதாகக் காட்டிக்கொள்வது ஆனால் கமிட்மெண்ட்டுடன் காதலிக்கவில்லை என்பது. இந்த நடத்தைக்கு ப்ரட்க்ரம்பிங் என்றுபெயர். இதுவும் ஒரு ரெட் ஃப்ளாங்காகவே பார்க்கப்படுகிறது. இப்படிச் செய்யும் ஒருவரிடத்தில் உங்களுக்கும் இன்டெரெஸ்ட் இருந்தால் நேரடியாகக் காதலிக்கிறாரா, இல்லையா எனக் கேட்டுவிட்டு, நகல்வது சிறந்தது.
Roommate syndrome (ரூம்மேட் சிண்ட்ரோம்)
காதலிக்கும் இருவர் ஒன்றகாகச் சேர்ந்து வாழத் தொடங்கியதும், அந்நியோன்யமாக இருக்க ஒருவித தயக்கம் ஏற்படுதல்.
Flirtationship (ஃப்லிர்டேஷன்ஷிப்)
எமோஷனலான பிணைப்பு இல்லாமல், கேஷ்வலாக காதலர்களைப் போல ஜொல்லு விட்டு பேசிக்கொள்வது.
Textlashionship (டெஸ்ட்லேஷன்ஷிப்)
ஒரு காதல் ஜோடி சேட்டிங்கில் மட்டுமே மெஸ்ஸேஜில் மட்டுமே காதலித்துக்கொண்டிருந்தால் அது டெஸ்ட்லேஷன்ஷிப்.
Cushioning (குஷனிங்)
ஒரு காதல் உறவு முறிந்தால் அதனால் ஏற்படும் வலியை மறக்க மற்றொருவருடன் இணைவது.
Rizz up (ரிஸ் அப்)
ஒருவரைக் கவருவதற்காக நடத்தைகளை மாற்றுவது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...