ஏஐ உச்சி மாநாடு: மோடி, ஜே.டி. வான்ஸை வரவேற்ற பிரான்ஸ் அதிபர்!
Valentine's Day: காதல் தரும் பிரிவால் நன்மை உண்டாகுமா? - நிபுணர்கள் சொல்லும் ஆச்சரிய தகவல்கள்!
"காதல்" அனைவருக்குமானது. இந்த காதலில் விழாதவர் அல்லது இதனை வாழ்வில் ஒருமுறையாவது அனுபவிக்காதவர் இருக்க முடியாது.
காதலை எவ்வளவு தூரம் உணர்கிறார்களோ, அவ்வளவு தூரம் பிரிவின் வலியையும் உணர்கிறார்கள். காதல் நமக்குச் சந்தோஷத்தையும், நன்மையும் கொடுக்கும் என்று தெரியும், ’காதல் பிரிவு தரும் வலி’ நமக்கு நன்மை தருவது பற்றி உங்களுக்குத் தெரியுமா? படிக்கும்போதே ஆச்சரியமாக உள்ளதல்லவா!
காதல் அல்லது உறவிலிருந்து பிரியும்போது வரும் வலி நமக்கு ஒருவகையில் நன்மை பயக்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-05/yn0lt2tp/hero-image-27.jpg)
'தி பிரேக்கப் மோனோலாக்ஸ்' என்ற புத்தகத்தின் ஆசிரியர் ரோஸி வில்பி, உறவிலிருந்து பிரிவதால் பல நன்மைகள் இருப்பதாகக் கூறுகிறார். இந்த நூலை எழுதுவதற்கு முன்பு பல மன தத்துவ நிபுணர்கள், சமூகவியலாளர்கள், விஞ்ஞானிகளிடம் ஆலோசித்துள்ளார்.
அப்படி காதலர்கள் பிரியும் போது என்ன நல்லது நடக்கிறது என்றால், நாம் எப்படிப்பட்ட உறவுகளிலிருந்தோம், எப்படிப்பட்ட மனிதருடன் உறவு கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி யோசிக்கவும் சிந்திக்கவும் இந்தப் பிரிவு வாய்ப்பு தருவதாகக் கூறப்படுகிறது.
இக்கட்டான சமயங்களில் மன வேதனை மிகுந்த வலி கொடுக்கும் அனுபவம் நமக்கு வாழ்க்கை பாடமே கற்றுக் கொடுக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
அதே சமயத்தில் ஒரு பிரிவை எப்படிப் பார்க்கிறோம் என்பதில்தான் ஒரு மனிதன் அடுத்த கட்டமே இருக்கிறது. அந்த உறவில் இருக்கும் போது மற்றவர்களின் குறையை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் உங்களை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பே இருக்காது. தனது தவறுகளைத் திருத்திக் கொண்டு அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும். பிரிந்து செல்வது எல்லோருக்கும் கடினமான விஷயம்தான் என்றாலும் அதனை ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் கடந்துதான் செல்கின்றனர்.
சிலர் இந்த பிரிவால் மேம்படுவார்கள், சுயமரியாதை, தன்னம்பிக்கை, பிறரின் இடத்திலிருந்து பார்ப்பது என நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்வார்கள். சிலரோ சில தவறான வழிகளுக்குச் செல்வார்கள்.
சிலர் ஒரு உறவிலிருந்து பிரிந்தவுடன் உடனடியாக புதிய உறவை உருவாக்க நினைப்பார்கள். அவ்வாறு செய்வது தவறு என்கின்றனர் நிபுணர்கள். சிலர் அந்த உறவிலிருந்து பிரிந்து மற்றொரு உறவில் ஆறுதல் தேடுவதற்காகப் புதிய உறவை ஏற்படுத்திக் கொள்வார்கள். இதனால் எதிர்புறத்தில் இருப்பவர்களுக்கும் பாதிப்பு, உங்களுக்கும் பாதிப்பு என்கின்றனர் நிபுணர்கள்.
ஒரு உறவு பிரிந்த பிறகு மற்றொரு உறவில் ஈடுபடுவதற்கு முன்பு கொஞ்சம் நேரம் ஒதுக்கி தங்களைப் பற்றிச் சிந்தித்து, தெளிவடைய வேண்டும். தங்களுக்கு என சுய ஒழுக்கம், கட்டுப்பாடு, விதிகள் வைத்திருக்க வேண்டும். ஒருவர் பிரிந்து செல்கிறார் என்றால், அவர்களை ஸ்டாக் செய்யக்கூடாது, அதேபோல் இந்த உறவின் பிரிவைக் கடக்க இன்னொருவர் தேவை என்ற விதத்தில் புதிய நபரைத் தேடவும் கூடாது. இதனால் மீண்டும் மீண்டும் அவருக்கே மன அழுத்தமும் குற்ற உணர்ச்சியும் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-05/73ytm7e4/hero-image-28.jpg)
இந்த உறவிலிருந்து பிரிந்த பின்பு நீங்கள் பிறரிடம் பழகும் போது ஒரு ஆரோக்கியமான நெருக்கம் கொள்வீர்கள், ஆரோக்கியமான இடைவெளியில் அந்த உறவு இருக்கும், விதிகள், கட்டுப்பாடு எனப் பல்வேறு விஷயங்களை இதனாலே பின்பற்றுவீர்கள், காதல் வலியைக் கொடுத்தாலும் மனிதனுக்கு ஒரு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
தற்போது இந்தியாவில் பிரேக்கப் தொடர்பான மக்களின் கருத்துக்கள், எண்ணங்கள் மாற தொடங்கியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது மோசமான உறவிலிருப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக அதிலிருந்து விலக முடிவெடுக்கின்றனர். காரணம் அதனுடன் வாழ்க்கை முடிந்துவிடவில்லை என மக்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர்.
காதலிலிருந்து பிரிந்த பிறகுப் புதிய நபர்களைச் சந்திக்கலாம் ஆரோக்கியமான பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ளலாம், காதலிலிருந்து பிரிந்த பிறகும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...