NEEK: ``எதை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்தீங்கன்னு தெரியல, ஆனா...' - மாமா தனுஷ் குற...
Mental Health: `3% இந்தியர்களே டெக்னாலஜியை சரியாக பயன்படுத்துகின்றனர்' - ஆய்வறிக்கை சொல்வதென்ன?
மொபைல் வாங்குவது முதல் கேட்ஜெட்களால் நம்மை அப்கிரேட் செய்துகொள்வது வரை போட்டிப்போட்டு தொழில்நுட்பங்களை நுகரும் நாம், அது குறித்த விழுப்புணர்வுடன் இருக்கிறோமா?
பிரைன் ராட் (Brain Rot), டூம் ஸ்க்ரோலிங் (Doom Scrolling), டிஜிட்டல் டிமென்ஷியா (Digital Dementia), இணையத்தால் தூண்டப்பட்ட ஏடிஹெச்டி (Internet-Induced ADHD), Phantom Vibration Syndrome போன்ற வார்த்தைகளைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இணையத்தின் அல்லது தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாட்டின் எதிர்மறை விளைவுகள் இந்த நோய்கள்.
இந்தியர்களைப் பாதிக்கும் பல உணர்ச்சி-நல்வாழ்வு (Emotional Wellbeing) பிரச்னைகள் மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது 1to1help அமைப்பு.
உணர்ச்சி-நலவாழ்வின் நிலை 2024, (The State of Emotional Wellbeing Report 2024) அறிக்கை, 83,000 ஆலோசனை அமர்வுகள், 12,000 திரையிடல்கள் மற்றும் 42,000 மதிப்பீடுகள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தொழில்நுட்பத்தாலும் வாழ்க்கைமுறையாலும் இந்தியர்களிடையே ஏற்பட்டுள்ள பொதுவான மனநல (Mental Health) பாதிப்புகள் பற்றி கூறப்பட்டுள்ளது.
டிஜிட்டல் வாழ்க்கையின் சமநிலையற்றநிலை
டிஜிட்டல் வாழ்க்கையைப் பொறுத்தவரை 100 ஆட்களில் 3 பேர் மட்டுமே சமநிலையுடன் இருக்கின்றனர். 50 பேர் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றனர். இவர்களால் இவர்களின் கேட்ஜெட்கள் இல்லாமல் இருக்க முடியாது. 10 பேர் போதுமான டிஜிட்டல் வாழ்க்கை ஈடுபாடு இல்லாமல் இருக்கின்றனர்.
மற்றொரு ஆய்வில் மன நல ஆலோசனைகள் பெறுவது 15% அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பதற்றம், மனச்சோர்வு மற்றும் பணியிட மன அழுத்தம் ஆகியவை மன நல ஆலோசகரைச் சந்திப்பதற்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-12-18/k1zwfqyq/Newssense-article-2024-12-18T124114.177.png)
மனநல உதவியை நாடும் ஆண்கள் அதிகரிப்பு
பொதுவாக பெண்கள்தான் அதிகமாக மனநல உதவிகளை நாடுவதாக பார்க்கப்படும். ஆண்கள் கூச்சத்தினாலும் மனநல உதவியை நாடுவது ஆண்தன்மை அல்ல என்ற உணர்வாலும் தவிர்த்துவிடுவர்.
ஆனால் கடந்த சில வருடங்களில் ஆண்கள் மனநல ஆலோசனைக்கு வருவது 7% அதிகரித்துள்ளது. இது மிகவும் ஆரோக்கியமான மாற்றமாகும்.
60% பெண்கள் உறவு சிக்கல்களுக்காகவும் 70% ஆண்கள் பொருளாதார சிக்கல்களுக்காகவும் மனநல ஆலோசகரை நாடுகின்றனர்.
பாதிக்கப்படும் இளைஞர்கள்
இளைஞர்களிடையே மனநல பாதிப்புகள் சாதாரணமாகி வருகின்றன. 30 வயதுக்கு கீழுள்ள பலர் பதற்றம் (Anxiety) மற்றும் மன அழுத்தத்துக்கு சிகிச்சை பெறுகின்றனர்.
வேலை மாற்றங்களைக் கையாளுதல் மற்றும் உறவுகளை பேணுவதில் ஏற்படும் சிக்கல்களால் 25 வயதுக்கு உட்பட்ட பலர் மனநல ஆலோசனை பெறுகின்றனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-07/c1cf7557-950f-4986-8a9b-fef14c86eea6/depression-1252577_640.png)
அதிகரிக்கும் தற்கொலைகள்
இந்த ஆய்வின்படி 2023ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024ம் ஆண்டு தற்கொலை அபாய வழக்குகள் 22% அதிகரித்துள்ளன. மன உளைச்சல் வழக்குகள் 17% அதிகரித்துள்ளன.
மனநல ஆலோசனை பெறுபவர்களில் பாதிபேர் தீவிரமான உணர்வுரீதியான சவால்களை எதிர்கொண்டுள்ளனர். மனநலம் குறித்த விழிப்புணர்வு பெருகியிருந்தாலும், மனநலனைப் பேணுவதற்கு அரசு நிறுவனங்கள் முயற்சிகள் முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.