ஜி. டி. நாயுடுவாக மாதவன்... படப்பிடிப்பு துவக்கம்!
நடிகர் மாதவன் நடிக்கும் மறைந்த விஞ்ஞானி ஜி.டி. நாயுடு வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
நடிகர் மாதவன் ராக்கெட்ரி படத்தின் வெற்றிக்குப் பின் சைத்தான் படத்தில் நடித்தார். இப்படமும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது. இதுபோக, இணையத் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது, மறைந்த ஆராய்ச்சியாளரும் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கைக் கதையில் ஜி.டி. நாயுடுவாக மாதவன் நடிக்க உள்ளார்.
இதையும் படிக்க: கோபி - சுதாகர் நடிக்கும் ‘ஓ காட் பியூட்டிஃபுல்’
ராக்கெட்ரி படத்தை தயாரித்த டிரை கலர்ஸ் பிலிம்ஸ் மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இப்படத்தை தயாரிக்கின்றனர். கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் துவங்கியுள்ளது.
![](https://media.assettype.com/dinamani/2025-02-11/jl9pwl60/vijaymoolan16811956473078414668532687255310927707.jpg)
ஜிடி நாயுடு கோவையைச் சேர்ந்தவர் என்பதால் பெரும்பாலான படப்பிடிப்பை கோவையிலேயே நடத்த திட்டமிட்டுள்ளனர்.