21 சதங்கள்.. 39 அரைசதங்கள்.. 7200 ரன்கள்.. ஓய்வை அறிவித்த கேகேஆர் நட்சத்திரம்!
நிறுவனங்களைப் பழிவாங்கும் ஊழியர்கள்! ஏன்?
பன்னாட்டு நிறுவனங்களில் பணியாளர்களின் திடீர் வேலை விலகல் சமீபத்தில் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் திடீரென பணியைவிட்டு விலகுவது சமீபத்தில் அதிகரித்துள்ளது. தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தைப் பழிவாங்கும் நோக்கில் (Revenge Quitting), இவ்வாறு செய்வதாகக் கூறுகின்றனர்.
நிறுவனத்தில் பணிச்சுமை, உரிய அங்கீகாரம், மேலதிகாரிகள் மீதான கோபம், அலுவலக அரசியல், சக ஊழியர்களின் நெருக்கடி, விடுமுறை கோரும்போது அலைக்கழிப்பது, ஊதிய உயர்வு, குறைந்த இடைவேளை, இதர காரணங்களுக்காகவும் பழிவாங்கும் நோக்கோடு சிலர் தங்களின் வேலையைவிட்டு விலகுகின்றனர். தாங்கள் வேலையைவிட்டு விலகியபின்பு தான், தங்களின் அருமை என்னவென்று நிறுவனங்களுக்கு தெரிய வரும் என்று பலரும் பதிலளிக்கின்றனர்.
இதையும் படிக்க:பிசிஓஎஸ் பிரச்னை இருந்தால் கருத்தரிக்க முடியாதா? - நம்பிக்கையும் உண்மையும்!
இதுதவிர, சிலரை நிறுவனங்கள் பணிநீக்கம் செய்யப்போவதை முன்னரே அறிந்து, நிறுவனத்தின் நடவடிக்கைக்கு முன்பாகவே தாங்களே விலகிக் கொள்கின்றனர். சில நிறுவனங்களில் உணவு விடுதி வசதிவேண்டியும் விலகுவதாக சிலர் கூறுகின்றனர்.
இதனிடையே, ஊழியர்கள் திடீரென பணி விலகுவதைக் கண்டறியும் பணியில் மனிதவள மேம்பாட்டு வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறாக, திடீரென வேலையைவிட்டு விலகுபவர்கள், அடுத்து என்ன செய்யப் போகின்றனர் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.