கடன் வழங்குபவா்கள் தீவால் சட்டத்தின் கீழ் ரூ. 3.58 லட்சம் கோடி மீட்பு: மத்திய அர...
அசத்திய ஷர்துல் தாக்குர்..! காலிறுதியில் மும்பை வெற்றி!
ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளது.
ஹரியாணா, மும்பை அணிக்கு நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் மும்பை அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரஞ்சி கோப்பை வரலாற்றில் 42 முறை மும்பை அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
காலிறுதியில் முதல் இன்னிங்ஸில் மும்பை 315 ரன்களும் ஹரியாணா 301 ரன்களும் எடுத்தனர். 2ஆம் இன்னிங்ஸில் மும்பை 339 ரன்கள் எடுக்க ஹரியாணா 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
மும்பை அணியின் ஷர்துல் தாக்குர் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள், 2ஆம் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்.
மற்றுமொரு காலிறுதியில் தமிழ்நாட்டை விதர்பா அணி 198 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
மும்பை அணி
முதல் இன்னிங்ஸ் 315
தனுஷ் கோடியான் 97, ஷாம்ஸ் முலானி 91.
2ஆம் இன்னிங்ஸ் -339
அஜிங்கியா ரஹானே - 108
சூர்யகுமார் யாதவ் - 70
ஹரியாணா அணி
முதல் இன்னிங்ஸ் - 301,
அன்கித் ராஜேஷ் குமார் -128
2ஆம் இன்னிங்ஸ் - 201
லக்ஷய சுமன் தலால் - 64
சுமித் குமார் - 62