நடுவர் நிதின் மேனன் விலகல்! சாம்பியன்ஸ் டிராபிக்கான நடுவர்கள் யார்? -முழு விவரம்
பிரதமருக்கு நன்றி தெரிவித்த தீபிகா படுகோன்..! காரணம் என்ன?
பிரதமர் மோடிக்கு மன நலம் குறித்த விவாதங்களுக்காக நடிகை தீபிகா படுகோன் நன்றி தெரிவித்து விடியோ வெளியிட்டுள்ளார்.
பரிக்ஷா பே சர்ச்சா (தேர்வுகள் குறித்த கலந்துரையாடல்) என்பது ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடி பள்ளிக் குழந்தைகளுடன் உரையாடும் ஒரு நிகழ்வாகும். இந்த நிகழ்வு 2018 முதல் நடைபெற்று வருகிறது.
மனநலத்தினால் பாதிக்கப்பட்ட தீபிகா படுகோன் 2015இல் எல்எல்எல் (லைவ் லவ் லாஃப் பவுண்டேஷன்) தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை தீபிகா படுகோன் விடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மன நலம் குறித்த விவாதங்களுக்கு குறிப்பாக கல்வி குறித்து பேசுவது மிகவும் முக்கியமானது என தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார்.
அவர் தனது இன்ஸ்டா பதிவில் கூறியதாவது:
பரிக்ஷா பே சர்ச்சாவின் 8ஆவது ஆண்டு வந்துவிட்டது. இந்தமுறை மனநலத்தின் முக்கியத்துவம் குறித்தும் பேசுகிறோம். இந்த நல்ல நோக்கத்துக்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த எபிசோடு வெளியாவதற்காக காத்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
இந்த புரோமோ விடியோவில் குழந்தைகள் தீபிகா படுகோனிடம் மனநலத்தை எப்படி முன்னேற்றுவது என்பது குறித்து கேள்வி கேட்பார்கள். அதற்கு தீபிகா, “எப்போதும் உங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள், அடக்கி வைக்காதீர்கள். குடும்பம் அல்லது நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்” எனக் கூறினார்.
39 வயதாகும் தீபிகா படுகோன் கடைசியாக கல்கி 2989ஏடி, சிங்கம் அகெய்ன் படங்களில் நடித்திருந்தார். 2018இல் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்தார். இவர்களுக்கு செப்.8ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அதற்குப் பிறகு எந்தப் படங்களிலும் நடிக்காமல் இருக்கிறார்.
பரிக்ஷா பே சர்ச்சாவின் 8ஆம் ஆண்டு விழாவை கடந்த திங்கள் கிழமை தில்லியில் பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். இதன் 2ஆவது எபிசோடில் தீபிகா படுகோன் கலந்துகொண்டார். இந்த விடியோ பிப்.12ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.