21 சதங்கள்.. 39 அரைசதங்கள்.. 7200 ரன்கள்.. ஓய்வை அறிவித்த கேகேஆர் நட்சத்திரம்!
காலிஸ் தலைசிறந்தவரில்லை..! வார்னேவை ஒப்பிட்டு பேசிய ஆடம் கில்கிறிஸ்ட்!
ரிக்கி பாண்டிங் சமீபத்தில் ஜாக்ஸ் காலிஸ்தான் தலைசிறந்த கிரிக்கெட்டர் எனக் கூறியிருந்தார். அதற்கு ஆடம் கில்கிறிஸ்ட் மறுப்பு தெரிவித்து வார்னேதான் தலைசிறந்தவர் எனக் கூறியுள்ளார்.
ஜாக்ஸ் காலிஸ் 13,000க்கும் அதிகமான ரன்கள், 45 டெஸ்ட் சதங்கள், 292 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்து 338 கேட்சுகளுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் அசத்தியுள்ளார். கிரிக்கெட் உலகிலேயே மிகச் சிறந்த ஆல்-ரவுண்டராக அசத்தியுள்ளார்.
இதனைக் குறிப்பிட்டு காலிஸ்தான் தலைசிறந்த கிரிக்கெட்டர் என ரிக்கி பாண்டிங் சமீபத்தில் கூறியிருந்தார். இதனை மறுத்துள்ள முன்னாள் ஆஸி. வீரர் ஆடம் கில் கிறிஸ்ட் ஷேன் வார்னேதான் தலைசிறந்தவர் எனக் கூறியுள்ளார். இது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியுள்ளது.
இந்த நிலையில் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியதாவது:
எண்களை விட முக்கியானது
எண்களை வைத்து ரிக்கி பாண்டிங் சொல்வது புரிகிறது. அதிக ரன்கள், விக்கெட்டுகள், கேட்ச்சுகள் எல்லாம் இருக்கிறது ஆனால், எண்களை தாண்டி இன்னும் சிலது இருக்கின்றன. என்னைப் பொருத்தவரை ஷேன் வார்னேதான் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்.
ஷான் வார்னே வாழ்ந்த விதம் அதிலிருந்து அவர் சாதித்தவை எல்லாம் உண்மையான ஒரு சாம்பியனுக்கான சான்று எனக் காட்டுகிறது.
பௌலிங்கை விட்டுவிட்டு பார்த்தாலும் பேட்டிங்கிலும் அவர் சிறப்பாக செயல்படக் கூடியவர். அவருக்கே அவருடைய பேட்டிங் திறமைக் குறித்து தெரியாது. கிரிக்கெட்டில் பேட்டிங், பௌலிங், கேட்ச், தந்திரமான திறமை என அனைத்திலும் என்னைப் பொருத்தவரை வார்னேதான் நம்.1 என்றார்.
ஷேன் வார்னே டெஸ்ட்டில் 708 விக்கெட்டுகள் 3,154 ரன்களளும் ஒருநாள் போட்டிகளில் 293 விக்கெட்டுகள், 1,018 ரன்களும் எடுத்துள்ளார்.