செய்திகள் :

விறுவிறுப்பாக நடைபெறும் 3-பிஎச்கே படப்பிடிப்பு!

post image

நடிகர் சித்தார்த் நடிக்கும் 3 பிஎச்கே படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் சித்தார்த் சித்தா படத்தின் வெற்றிக்குப் பின், கமல்ஹாசனுடன் இந்தியன் - 2, மிஸ் யூ என்ற படங்கள் வெளியானது. இப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

இவரது 40-வது படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்குகிறார்.

இதையும் படிக்க: ஜி. டி. நாயுடுவாக மாதவன்... படப்பிடிப்பு துவக்கம்!

இதில் நடிகர்கள் சரத்குமார், தேவயாணி, மீத்தா ரகுநாத், கன்னட நடிகை சைத்ரா அச்சர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மிடில் கிளாஸ் குடும்பத்தின் சொந்த வீடு கனவாக இப்படம் உருவாகி வருவதாகத் தெரிகிறது. இந்தப் படத்துக்கு 3பிஎச்கே எனப் பெயரிடப்பட்ட டீசரை அண்மையில் வெளியிட்டிருந்தனர்.

தற்போது, படத்தின் படப்பிடிப்பு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகம் உள்பட சென்னையின் சுற்றுவட்டார பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மே வெளியீடாக இப்படம் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

18 நாள்களில் 36 கதாபாத்திரங்கள் அறிமுகம்..! எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள எம்புரான் படத்தின் 36 கதாபாத்திரங்கள் தினமும் இரண்டிரண்டாக அறிமுகமாகி வருகின்றன.நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் எம்புரான். லூசிஃ... மேலும் பார்க்க

ரெட்ரோ முதல் பாடல் தேதி!

நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தின் முதல் பாடல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ரெட்ரோ.ஆக்சன் கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில்... மேலும் பார்க்க

வா வாத்தியார் என்ன ஆனது?

நடிகர் கார்த்தி நடித்த வா வாத்தியார் படம் வெளியீட்டிற்குத் தாமதமாகி வருகிறது.கார்த்தி நடிப்பில் வெளியான மெய்யழகன் திரைப்படம் ரசிகர்களிடம் கவனம் பெற்று வெற்றிப்படமானது. காதல், ஆக்சன் இல்லாமல் இரு ஆண்கள... மேலும் பார்க்க

பிரதமருக்கு நன்றி தெரிவித்த தீபிகா படுகோன்..! காரணம் என்ன?

பிரதமர் மோடிக்கு மன நலம் குறித்த விவாதங்களுக்காக நடிகை தீபிகா படுகோன் நன்றி தெரிவித்து விடியோ வெளியிட்டுள்ளார். பரிக்ஷா பே சர்ச்சா(தேர்வுகள் குறித்த கலந்துரையாடல்) என்பது ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடி ... மேலும் பார்க்க

ஓடிடியில் காதலிக்க நேரமில்லை!

காதலிக்க நேரமில்லை திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.இயக்குநர் கிருத்திகா உதயநிதி - ரவி மோகன் கூட்டணியில் உருவான காதலிக்க நேரமில்லை திரைப்படம் கடந்த ஜன. 14-ல் வெளியானது. தன்பாலின ஈர்ப்பு, திருமணம் ... மேலும் பார்க்க

இட்லி கடை வெளியீட்டில் மாற்றம்?

இட்லி கடை படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ராயன் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இயக்குநராகவும் குபேரா, இட்லி கடை படங... மேலும் பார்க்க