ஊரகப் பகுதிகளில் மருத்துவ சேவைகள் கிடைப்பதில்லை என்பதில் உண்மையில்லை: ஜெ.பி.நட்...
மீண்டும் பிளாஸ்டிக்: ‘பேப்பர் ஸ்ட்ரா’ வேலைக்காகாது! -டிரம்ப் அதிரடி!
அமெரிக்காவில் பிளாஸ்டிக் பயன்பட்டை அந்நாட்டின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் ஊக்குவிக்க முடிவெடுத்துள்ளார். அதன்படி, அமெரிக்காவில் பிளாஸ்டிக் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தவும் பிற பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த கட்டுப்பாடும் முன்னாள் அதிபர் ஜோ பைடன் தடை விதித்திருந்த நிலையில், இதற்கு நேர்மாறான உத்தரவை டிரம்ப் பிறப்பித்துள்ளார்.
அதன்படி, இனிமேல் அமெரிக்க அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தலாம். செய்தியாளர்களுடன் டிரம்ப் பேசியதாவது, “பேப்பர் ஸ்ட்ராக்களெல்லாம் வேலைக்காகாது! அவை உடைந்து போய் விடுவதால் அவற்றை பயன்படுத்த முடியாத நிலை உண்டாகிறது” என்று தான் அனுபவித்த அசௌகரியங்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் புதிய உத்தரவில் கையெழுத்திட்டிருப்பதைத் தொடர்ந்து, பேப்பர் ஸ்ட்ராக்களை கொள்முதல் செய்ய வேண்டாமென அரசு நிர்வாகம் தரப்பில் பிற துறைகளுக்கும் உடனடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.