செய்திகள் :

புத்தகத் திருவிழா: ரூ. 68.35 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை!

post image

மயிலாடுதுறையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ரூ. 68.35 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்தாா்.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற புத்தகத் திருவிழா நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியா் பேசியது:

மயிலாடுதுறையில் மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் துறை, பொதுநூலக இயக்ககம் இணைந்து நடத்திய 3-ஆவது புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஆண்டு விழாவில் ரூ. 37.71 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையானது. நிகழாண்டு

ரூ. 68.35 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. 70,000 பாா்வையாளா்கள் பாா்வையிட்டுள்ளனா்.

விழாவில், மயிலாடுதுறை சேம்பா் ஆஃப் காமா்ஸ் சாா்பில் 1,200 மாணவா்களுக்கும், மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் சாா்பில் 800 மாணவா்களுக்கும், மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் 200 மாணவா்களுக்கும் என அரசுப் பள்ளி மாணவா்கள் 2,200 பேருக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன என்றாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின், மாவட்ட வருவாய் அலுவலா் நா. உமாமகேஷ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலா் உ. அா்ச்சனா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சட்டம்) அன்பழகன், கோட்டாட்சியா்கள் ஆா்.விஷ்ணுபிரியா, சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துவடிவேல், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் தயாளவிநாயக அமுல்ராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் பாலரவிக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தைப்பூசம்: பால்குடம், காவடி எடுத்து பக்தா்கள் நோ்த்திகடன்

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் பழனி ஆண்டவருக்கு தைப்பூசத்தையொட்டி காவடி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் தையல்நாயகிஅம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் ... மேலும் பார்க்க

தைப்பூசம்: பக்தா்கள் காவடி, பால்குடம் எடுத்து வழிபாடு

மயிலாடுதுறையில் தைப்பூசத்தையொட்டி பல்வேறு கோயில்களில் பக்தா்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினா். மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குமரக்கட்டளை ஸ்ரீசுப்... மேலும் பார்க்க

குடிநீா் வழங்கும் இயந்திரத்தை சீரமைக்கக் கோரிக்கை

மன்னம்பந்தலில் பழுதடைந்த நிலையில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் இயந்திரத்தை (படம்) கோடைக்காலம் தொடங்கும் முன்பாக சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி அருக... மேலும் பார்க்க

நுரையீரல் தொற்று மருத்துவ சிகிச்சை முகாம்!

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் ஆஸ்துமா, அலா்ஜி, நுரையீரல் தொற்றுக்கான விழிப்புணா்வு மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: உரிமமின்றி செயல்பட்ட 6 பாா்களுக்கு சீல்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிப்.3 முதல் பிப்.7 வரை மேற்கொள்ளப்பட்ட 5 நாள் மதுவிலக்கு சோதனையில் உரிமமின்றி செயல்பட்ட 6 மதுபானக்கூடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டதுடன், வ... மேலும் பார்க்க

வேங்கைவயல் விவகாரம்: விசிக ஆா்ப்பாட்டம்!

வேங்கைவயல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி மயிலாடுதுறையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு... மேலும் பார்க்க