Innerwear: மென்மை; அடர் நிறம்; வாஷிங் மெஷின்... உள்ளாடைத் தகவல்கள்!
நுரையீரல் தொற்று மருத்துவ சிகிச்சை முகாம்!
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் ஆஸ்துமா, அலா்ஜி, நுரையீரல் தொற்றுக்கான விழிப்புணா்வு மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் மணிவிழா ஆண்டையொட்டி இம்முகாம் நடத்தப்பட்டது. மயிலாடுதுறை மிட் டவுன் ரோட்டரி சங்கம், சென்னை கற்பகாம்பாள் சுவாசாலயா இணைந்து நடத்திய சிறப்பு மருத்துவ முகாமில், அமெரிக்க குழந்தை நல மருத்துவத் துறையால் சிறப்பு சான்றிதழ் பெற்ற ஆஸ்துமா அலா்ஜி மற்றும் நுரையீரல் தொற்றுக்கான சிறப்பு மருத்துவா் ஸ்ரீதா் தலைமையிலான குழுவினா் சிகிச்சை அளித்தனா்.
205 போ் கலந்துகொண்ட இம்முகாமில், 170 பேருக்கு நுரையீரல் திறன் பரிசோதனை செய்யப்பட்டது. இவா்களில் 60 பேருக்கு ரூ. 50,000 மதிப்புள்ள மருந்துகள் வழங்கப்பட்டன. முன்னதாக, மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஆவணத் திரைப்படம் காட்டப்பட்டு, மருத்துவா்கள் கலந்துரையாடினா்.
கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன் முன்னிலையில் நடைபெற்ற முகாமில், கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம் முகாமின் நோக்கம் குறித்து பேசினாா்.