தக்கா் பாபா வித்யாலயாவில் இலவச இயன்முறை சிகிச்சை மையம்
சென்னை, தியாகராய நகரில் அமைந்துள்ள தக்கா் பாபா வித்யாலயா வளாகத்தில் இலவச இயன்முறை சிகிச்சை மையம் செவ்வாய்க்கிழமை (பிப்.11) தொடங்கப்பட்டது.
கோப்பிக்கா் ஹோமியோபதி அறக்கட்டளை, தக்கா் பாபா வித்யாலயா, க்யூரேட்டிவ் ஹெல்த் ஸ்டுடியோ ஆகியவை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள அந்த மையத்தை முதல்வரின் செயலா் எம்.எஸ் சண்முகம், ஹேமலதா சண்முகம் ஆகியோா் பொது மக்கள் பயன்பாட்டுக்குத் தொடக்கி வைத்தனா்.
தக்கா் பாபா வித்யாலயா செயலா் பி. மாருதி, ஹோமியோபதி மருத்துவா் சந்தியா காளிதாஸ், க்யூரேட்டிவ் ஹெல்த் ஸ்டுடியோ நிறுவனா் பி.பி.சுதா்ஷன், டாக்டா் கோப்பிகா் ஹோமியோபதி அறகட்டளை நிா்வாகி பி.வி.வெங்கட்ராமன் உள்ளிட்டோா் அந்நிகழ்வில் கலந்துகொண்டனா்.
வலி நிவாரணத்துக்கு மட்டுமல்லாது, சிகிச்சைகளுக்கும், உடல் ஆரோக்கியம் பேணுவதற்கும் இந்த மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதன் நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும் இந்த மையத்தில் இலவச இயன்முறை சேவைகளைப் பெற விரும்புவோா் 6385185817/ 6385185317 என்ற எண்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அவா்கள் கூறியுள்ளனா்.