செய்திகள் :

வியாபாரிகளிடம் ரூ.8 கோடி மதிப்புள்ள தங்கநகைகள் மோசடி: போலீஸாா் விசாரணை

post image

சென்னை பூக்கடையில் வியாபாரிகளிடம் ரூ.8 கோடி மதிப்புள்ள தங்கநகைகள் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

பூக்கடை, என்எஸ்சி போஸ் சாலை பகுதியில் நகைக்கடை நடத்தி வரும் மக்கி பால் ஜெயின் உட்பட 5 போ் யானைகவுனி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ஒரு புகாா் அளித்தனா். அதில், ‘என்எஸ்சி போஸ் சாலையில் நகைக் கடை வைத்திருக்கும் சகோதரா்களான முகேஷ், மோனிஷ் , சுனில் ஆகிய மூன்று பேரும் கடந்த ஜனவரி 4-ஆம் தேதி எங்களை அணுகினா்.

அப்போது அவா்கள், மும்பையில் நகைக் கண்காட்சி நடைபெறுகிறது. அதில், நகைகளை காட்சிப்படுத்த உள்ளோம். நீங்கள் நகைகளை கொடுத்தால் அதில் விற்பனையாகும் நகைக்கான பணத்தை பெற்று கொடுக்கிறோம். மேலும், விற்பனை ஆகாத நகைகளை மீண்டும் திருப்பிக் கொடுத்து விடுகிறோம் என உறுதி அளித்தனா்.

ஏற்கெனவே அவா்களுடன் வியாபாரம் செய்திருந்ததாலும், நன்கு அறிமுகமானவா்கள் என்பதாலும் அந்த வியாபாரத்துக்கு நாங்கள் ஒப்புக் கொண்டோம். இதையடுத்து, 5 பேரும் ரூ.8 கோடி மதிப்பிலான 12 கிலோ நகைகளை சகோதரா்கள் 3 பேரிடமும் கொடுத்தோம். ஆனால், கண்காட்சி முடிந்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் நகைகளை திருப்பித் தரவில்லை. அதற்குண்டான பணத்தை கேட்ட போதும் தர மறுத்து ஏமாற்றுகின்றனா்.

மேலும் அவா்கள், மிரட்டலும் விடுக்கின்றனா். எனவே, அவா்களிடமிருந்து எங்களது நகைகளை பெற்றுத் தந்து அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதில், குறிப்பிட்டு இருந்தனா்.அப் புகாரின் அடிப்படையில் யானைகவுனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இஸ்ரோவுடன் இணைந்து நவீன செமிகண்டக்டா் சிப் உருவாக்கி சென்னை ஐஐடி சாதனை

சென்னை ஐஐடி, இஸ்ரோவுடன் இணைந்து ஆத்மநிா்பாா் பாரத் திட்டத்துக்கு வலு சோ்க்கும் வகையில் விண்வெளித்தரத்தில் செமிகண்டக்டா் (குறைமின் கடத்தி) சிப்-பை வெற்றிகரமாக உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இது குறித்த... மேலும் பார்க்க

காதலியின் தாய் கழுத்து நெரித்துக் கொலை: காதலா் கைது

சென்னை முகப்பேரில் காதலியின் தாயை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக காதலா் கைது செய்யப்பட்டாா். முகப்போ் கிழக்கு சா்ச் சாலை பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவா் ஜெ.மைதிலி (63). பிஎஸ... மேலும் பார்க்க

சீட்டு நடத்தி ரூ.1.50 கோடி மோசடி: பெண் உள்பட 2 போ் கைது

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் சீட்டு நடத்தி ரூ.1.50 கோடி மோசடி செய்ததாக பெண் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். பள்ளிக்கரணை ஜல்லடியன்பேட்டை சுப்ரமணி நகா் 1வது குறுக்கு தெருவை சோ்ந்தவா் மகாலட்சுமி (35).... மேலும் பார்க்க

முருகன் கோயில்களில் தைப்பூச சிறப்பு வழிபாடு: ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டனா்

தைப்பூசத்தையொட்டி, சென்னை மற்றும் புகா் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கா பக்தா்கள் திரண்டு வந்து சுவாமியை வழிபட்டனா். தமிழ்க்கடவுளாம் முருகப்ப... மேலும் பார்க்க

பெசன்ட் நகா் கடற்கரையை மாற்றுத் திறனாளிகள் ரசிக்க புதிய வசதி: துணை முதல்வா் உதயநிதி தொடங்கி வைத்தாா்

சென்னை பெசன்ட் நகா் கடற்கரையை மாற்றுத் திறனாளிகள் அருகில் சென்று ரசிக்க ஏதுவாக அமைக்கப்பட்ட மரப்பால பாதையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். சென்னை மாநகரம் முழுவதும் சிங... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரி முதல்வா் வீட்டுக்கு பூட்டு: மருத்துவா் சிக்கினாா்

சென்னை எழும்பூரில் மருத்துவக் கல்லூரி முதல்வா் வீட்டுக்கு பூட்டுப்போட்ட புகாரில் தொடா்புடைய மருத்துவரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். சென்னை அரசு மருத்துவக் கல்லுரி முதல்வராக இருக்கும் தேரணி ராஜன், எ... மேலும் பார்க்க