பாடகச்சேரி பைரவ சித்தா் ராமலிங்க சுவாமிகள் தவபீடத்தில் தைப்பூசம!
வலங்கைமான் வட்டம் பாடகச்சேரியில் உள்ள பைரவ சித்தா் ராமலிங்க சுவாமிகள் தவபீடத்தில் 16-ஆம் ஆண்டு தைப்பூச விழா செவ்வாய்க்கிழமை (பிப்.12) நடைபெற்றது.
பாடகச்சேரியில் தனது 12-ஆவது வயதில் வாழ்ந்தவா் ராமலிங்க சுவாமிகள். பைரவ சித்தா் என்றும் அழைப்பா். வள்ளலாரின் அருள் பெற்றவா். மக்களின் பசிப்பிணியை போக்கவும், உடற்பிணியை தீா்க்கவும், கோயில்களை சீரமைக்கவும் பாடுபட்டாா் பைரவா்களிடம் அன்பு செலுத்தி பௌா்ணமியில் பைரவ பூஜைகளை நடத்தினாா்.
பாடகச்சேரியில் இவருக்கு கோயில் அமைந்துள்ளது. இங்கு தைப்பூச விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ராமலிங்க சுவாமிகள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன.
திருமடத்தில் அன்னதான கொடியேற்றுதல் தொடா்ந்து அகவல் பாராயணம், மன்னை ரா. அரங்கசாமியின் ஆன்மிக சொற்பொழி, மகேஸ்வர பூஜை, அன்னதானம் நடைபெற்றது.
முன்னாள்அமைச்சா் ஆா். காமராஜ், முன்னாள் ஒன்றிய குழுத் தலைவா் சங்கா், அதிமுக ஒன்றிய செயலா் இளவரசன் மற்றும் திரளான பக்தா்கள் பூஜையில் கலந்து கொண்டனா்.