வேலூருக்கு 2 ஆயிரம் டன் நெல் அனுப்பிவைப்பு!
திருவாரூா் மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு வேலூருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
நீடாமங்கலம், வலங்கைமான் வட்டத்தில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் சன்னரக நெல் லாரிகள் மூலம் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ரயில் மூலம் வேலூருக்கு அரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.