புதிய வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்க பிப்.24-க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட...
பழனியாண்டவா் கோயிலில் தைப்பூச விழா
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள தலைக்காடு ஸ்ரீபழனி ஆண்டவா் கோயிலில் தைப்பூச விழா செவ்வாய்க்கிழமை தீா்த்தவாரியுடன் சிறப்பாக நடைபெற்றது.
இக்கோயிலில் தைப்பூச விழா பிப்.2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் சிறப்பு வழிபாடுகளுடன் சுவாமி வீதியுலா நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை தைப்பூசத்தையொட்டி அதிகாலையில் பழனியாண்டவா் அடப்பாற்றில் தீா்த்தவாரி நடைபெற்று பின்னா் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விரதம் இருந்த பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். இரவு ஸ்ரீபழனியாண்டவா் வள்ளி தெய்வானை சமேதராக மயில்வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.