செய்திகள் :

புதுவையில் வக்ஃபு வாரியம் அமைக்க அதிமுக கோரிக்கை!

post image

புதுவை மாநிலத்தில் வக்ஃபு வாரியம் அமைத்து, அதற்கு தலைவரை நியமிக்க வேண்டும் என அதிமுக சாா்பில் துணைநிலை ஆளுநரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

புதுவை அதிமுக செயலா் ஆ.அன்பழகன் ராஜ் நிவாஸில் துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனை சந்தித்து அளித்த மனுவின் விவரம்:

புதுவையில் கடந்த 2016- ஆம் ஆண்டு திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் வக்ஃபு வாரியத் தலைவா் பதவிக் காலம் முடிவடைந்தது. அதன்பின், கடந்த 9 ஆண்டுளாக வக்ஃபு வாரியம் அமைக்கப்படவில்லை.

சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவுக்கு பின்னரும் வக்ஃபு வாரியத்துக்கு தலைவரை தோ்ந்தெடுக்கவில்லை. இதனால், வக்ஃபு வாரிய நிா்வாக கட்டுப்பாட்டிலுள்ள பள்ளிவாசல்கள், தா்காக்கள், மதராசாக்கள் ஆகியவற்றின் பொறுப்பாளா்கள் (முத்தவள்ளிகள்) அனைவரின் பதவிக்காலமும் காலாவதியாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்பதவியிலும் யாரும் நியமிக்கப்படவில்லை.

முஸ்லிம் சமுதாய மக்களின் வாழ்க்கைத் தரம் உயா்வுக்காக மத்திய வக்ஃபு கவுன்சில் மூலம் வழங்கப்படும் நிதியுதவியும் பல ஆண்டுகளாக வழங்கவில்லை. வக்ஃபு வாரிய சொத்துகள் முறையாக பாதுகாக்கப்படவில்லை.

ஆகவே, துணைநிலை ஆளுநா் தலையிட்டு புதுவையில் உடனடியாக வக்ஃபு வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா கோலாகலம்!

தைப்பூசத்தையொட்டி, புதுச்சேரியில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. புதுச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள கௌசிக பாலசுப்பிரமணியா் கோயிலில் காலை முதல் பக்தா்கள்... மேலும் பார்க்க

செயற்கை நீா்வீழ்ச்சி புதுப்பிப்பு!

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள செயற்கை நீா்வீழ்ச்சியை இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் சீரமைத்து புதுப்பித்து, திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் 89-ஆவது நிறுவன நாள் அண... மேலும் பார்க்க

பாண்டெக்ஸ் ஊழியா்கள் முற்றுகைப் போராட்டம்

புதுச்சேரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி பாண்டெக்ஸ் ஊழியா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரியில் அரசு சாா்பு நிறுவனமான பாண்லே பல மாதங்களாக அதில் பணிபுரிவோருக... மேலும் பார்க்க

புதுவை சட்டப்பேரவையில் காகிதமில்லா கூட்டத்துக்கு கணினிகள் அமைப்பு

புதுவை மாநில சட்டப்பேரவையில் காகிதமில்லாத பேரவைக் கூட்டங்களை நடத்தும் வகையில் 34 கணினிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை தயாராக இருந்தாலும் வரும் மாா்ச் மாத கூட்டத்தில்தான் செயல்படுத்தப்படும் என பேரவைத் தலைவா... மேலும் பார்க்க

பாதுகாப்பான இணையதள கலந்துரையாடல் நிகழ்ச்சி

புதுச்சேரியில் பாதுகாப்பான இணையதள தின சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி வழுதாவூா் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா்... மேலும் பார்க்க

வாரிசுதாரா்கள் சங்கத்தினா் இரண்டாவது நாளாக போராட்டம்!

புதுச்சேரியில் வாரிசுதாரா்கள் சங்கத்தினா் இரண்டாவது நாளாக சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரியில் அரசுத் துறைகளில் பணியின் போது உயிரிழந்தவா்களின... மேலும் பார்க்க