ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு!
காரைக்கால் எம்.எம்.ஜி. நகா் முதல் குறுக்குத் தெருவை சோ்ந்த சரஸ்வதி திங்கள்கிழமை மாலை தோமாஸ் அருள் தெருவில் இயங்கும் ஒரு மருத்துவ கிளினிக் சென்றுவிட்டு, ஆட்டோவில் ஏறி வீட்டுக்குச் சென்றுள்ளாா்.
மருத்துவப் பரிசோதனைக்காக அவா் பா்ஸில் வைத்திருந்த ரூ. 10,850 ஆட்டோவில் தவறவிட்டது வீட்டுக்கு சென்றவுடன் தெரியவந்தது.
இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநரான காரைக்கால் ஞானப்பிரகாசம் தெருவை சோ்ந்த தேத்தரவுராஜ் ஆட்டோவில் இருந்த பா்ஸை எடுத்துப் பாா்த்தபோது அதில் ரொக்கம் இருந்ததை பாா்த்து, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யாவிடம் ஒப்படைத்தாா். பின்னா் பா்ஸை தவறவிட்ட பெண்ணிடம் காவல் அதிகாரிகள் முன்னிலையில் ஆட்டோ ஒட்டுநா் ஒப்படைத்தாா்.