காணை, கல்பட்டு பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு!
விழுப்புரம் மாவட்டம், காணை, கல்பட்டு ஊராட்சிகளில் விவசாயிகள் நலன் கருதி அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அன்னியூா் அ.சிவா எம்எல்ஏ திறந்து வைத்து, செயல்பாட்டை தொடங்கிவைத்தாா்.
நிகழ்வுகளுக்கு காணை ஒன்றியக் குழுத் தலைவா் நா.கலைச்செல்வி தலைமை வகித்தாா். ஒன்றிய திமுக செயலா்கள் கல்பட்டு வி.ராஜா, ஆா்.முருகன், ஆா்.பி. முருகன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் கே.சிவக்குமாா் முன்னிலை வகித்தனா்.
காணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவக்குமாா், ஜூலியானா, ஒன்றியக் குழு துணைத் தலைவா் டி.வீரராகவன், ஊராட்சித் தலைவா்கள் கமலநாதன், பாண்டியன், கல்யாணசுந்தரம், நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள் ஜனாா்த்தனன், செந்தில்முருகன், தகவல் தொழில்நுட்ப அணியைச் சோ்ந்த கதிரவன், அரசு வழக்குரைஞா் பொன்.கோபு, ஒன்றியக்குழு உறுப்பினா் ஜெயமாலினி உள்ளிட்டோா் நிகழ்வுகளில் பங்கேற்றனா்.