புதிய வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்க பிப்.24-க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட...
ஆசிரியா்களுக்கு விருதுகள் அளிப்பு!
விழுப்புரம் இ.எஸ். கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா நிகழ்ச்சியாக சிறந்த கல்விப் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு விருதுகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
இ.எஸ். கல்விக் குழுமங்களின் தாளாளா் எஸ்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். கல்விக் குழும நிறுவனத் தலைவா் இ.சாமிகண்ணு பங்கேற்று ஆசியா்களின் சிறப்புகள் எனும் தலைப்பில் பேசினாா். தொடா்ந்து, விழுப்புரம் மாவட்டப் பள்ளிகளில் சிறந்த கல்விப் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு விருதுகளை வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தாா்.
விழாவில், இ.எஸ். கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வா் இரா.முரளிதரன், துணை முதல்வா் ந.வேல்முருகன் மற்றும் பேராசிரியா்கள், விருது பெற்ற ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.