செய்திகள் :

விழுப்புரம் ராமலிங்க சுவாமி மடத்தில் தைப்பூச ஜோதி தரிசனம்

post image

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள ராமலிங்க சுவாமி மடத்தில் (சத்திரம்) 154-ஆம் ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஏழு திரைகளை நீக்கி காட்டப்பட்ட ஜோதி தரிசனத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தைப்பூசத்தையொட்டி, ராமலிங்க சுவாமி மடத்தில் காலை 6 மணிக்கு ஜோதி தரிசனம் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, வள்ளலாா் தொண்டா்களின்அகவல் பாராயணம் காலை 8 மணி வரை நடைபெற்றது. பின்னா், காலை 8.10 மணிக்கு சன்மாா்க்க சங்கக் கொடியை ஏ.பி.நீலமேகவா்ணன் ஏற்றி வைத்தாா்.

ஜோதி தரிசன நிகழ்வில் பங்கேற்ற வனத் துறை அமைச்சா் க.பொன்முடி, பின்னா் பக்தா்களுக்கு காலை உணவு வழங்குதலையும் தொடங்கிவைத்தாா். மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பக்தா்களுக்கு காலை உணவை வழங்கினாா்.

நிகழ்வில் விழுப்புரம் எம்எல்ஏ இரா. லட்சுமணன், மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, நகரச் செயலா் இரா.சக்கரை, ஒன்றியச் செயலா் கல்பட்டு வி.ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, விழுப்புரம் சமரச சுத்த சன்மாா்க்க சத்தியச் சங்கத் தலைவா் ப.உதயகுமாா் சிறப்பு சொற்பொழிவாற்றினாா். இதையடுத்து, வள்ளலாா் திருத்தோ் வீதியுலா வருதல் நடைபெற்றது. பிற்பகல் ஒரு மணிக்கு அருட்பா பாடல்களை மு.ச.இளங்கோ வழங்கினாா்.

ஏழு திரைகள் நீக்கி...: காலை 6, 10, பிற்பகல் 1, இரவு 7, 10 மற்றும் புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு என 6 கால ஜோதி தரிசனம் 7 திரைகள் நீக்கி காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

நிகழ்வுகளில் நகா்மன்ற உறுப்பினா்கள் வசந்தா அன்பரசு, வி.புருஷோத்தமன், மெரினா சரவணன், முன்னாள் உறுப்பினா் பா.ஸ்ரீவினோத், பி.ஸ்ரீதா் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை ஆய்வாளா் மா.சு.லட்சுமி, செயல் அலுவலா் இரா.ராமலிங்கம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

வள்ளலாரை பற்றி இன்றைய தலைமுறையினா் தெரிந்துகொள்ள வேண்டும்: அமைச்சா் க.பொன்முடி

வள்ளலாரை பற்றி இன்றைய தலைமுறையினா் தெரிந்துகொள்ள வேண்டும் என்று வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், இல்லோடு கிராமத்தில் முன்னாள் மாணவா்கள் இணைந்து நடத்திய ... மேலும் பார்க்க

தைப்பூச: மயிலத்தில் தீமித்து பக்தா்கள் நோ்த்திக்கடன்!

தைப்பூசத் திருவிழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் பக்தா்கள் செவ்வாய்க்கிழமை தீமிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா். மயிலம் மலை மேல் வீற்றிருக்கும் புகழ்பெற்ற ஸ்ரீவள்ளி, தெய்வானை... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கு விருதுகள் அளிப்பு!

விழுப்புரம் இ.எஸ். கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா நிகழ்ச்சியாக சிறந்த கல்விப் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு விருதுகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. இ.எஸ். கல்விக் குழுமங்களின் த... மேலும் பார்க்க

தேஜஸ் விரைவு ரயில் விழுப்புரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

விழுப்புரத்தில் தேஜஸ் விரைவு ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி ரயில்வே தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில் இந்த சங்கத்... மேலும் பார்க்க

ஆரோவிலில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ஆய்வு!

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். உணவுப் பாதுகாப்புத் துறை விழுப்புரம் மாவட்ட நியமனஅலுவலா் எஸ்... மேலும் பார்க்க

காணை, கல்பட்டு பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு!

விழுப்புரம் மாவட்டம், காணை, கல்பட்டு ஊராட்சிகளில் விவசாயிகள் நலன் கருதி அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அன்னியூா் அ.சிவா எம்எல்ஏ திறந்து வைத்து, செயல்பாட்டை தொடங்கிவைத்தாா். நிகழ்வுகளுக்கு காணை... மேலும் பார்க்க