செய்திகள் :

மார்ச் 15-க்குள் மீண்டும் சாலைப் பாதுகாப்பு தணிக்கைச் செய்யப்பட வேண்டும்: அமைச்சர் எ.வ.வேலு

post image

சென்னை: மார்ச் 15 ஆம் தேதிக்குள் மீண்டும் சாலைப் பாதுகாப்பு தணிக்கைச் செய்யப்பட வேண்டும் என்றும், இந்த ஆண்டு பொறியாளர்களுக்குச் சாலைப் பாதுகாப்பு தணிக்கைப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

சென்னை, கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள கூட்டரங்கில், நெடுஞ்சாலைத்துறை சாலைகளின் பராமரிப்புப் பணிகள் தொடர்பாக, இன்று(பிப்.12) அமைச்சர் .எ.வ.வேலு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, நெடுஞ்சாலைகளின் பராமரிப்புப் பணிகளில் பொறியாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், கடந்த நான்கு ஆண்டுகளில் பெரும்பாலான சாலைகள் மேம்படுத்தப் பட்டுள்ளன. மீதமுள்ள சாலைகளை பள்ளமில்லா சாலைகளாகப் பராமரிக்க வேண்டும். சாலைகளின் இரு புறங்களில் உள்ள முட்புதர்கள் முழுமையாக அகற்றப்பட வேண்டும்.

சாலைகளின் இருபுறங்களிலும் மண் புருவங்கள் சரியாக அமைக்கப்பட வேண்டும். கிலோ மீட்டர் மற்றும் பர்லாங் கற்களுக்கு வர்ணம் பூச வேண்டும். அறிவிப்பு பலகைகள், சாலை உபகரணங்கள் மற்றும் இரும்பு தடுப்பான்கள் முதலியவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும், அதற்குத் தனிப்பதிவேடு பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், சாலைகளில் தேவையில்லாத இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டாம் என்றும், தேவையானால் அதற்குரிய இடத்தில், எச்சரிக்கைப் பலகை அமைக்க வேண்டும். சாலை உபகரணங்கள் ஐஆர்சி வழிகாட்டுதலின்படி, தேவையான இடங்களில் மட்டும் வேகத்தடை அமைக்கப்பட வேண்டும். சாலைகளில் வெள்ளைக் கோடுகள் தரத்துடன் போடப்பட வேண்டும்.

பாரிஸில் பிரதமர் மோடி - சுந்தர் பிச்சை சந்திப்பு

நிலஎடுப்புப் பணிகளில் பொறியாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக கண்காணிப்புப் பொறியாளர்கள், மாவட்ட ஆட்சியர்களைத் தொடர்புக் கொண்டு, நிலஎடுப்புப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும், மார்ச் 15 ஆம் தேதிக்குள் மீண்டும் சாலைப் பாதுகாப்பு தணிக்கைச் செய்யப்பட வேண்டும் என்றும், இந்த ஆண்டு பொறியாளர்களுக்குச் சாலைப் பாதுகாப்பு தணிக்கைப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

பாலங்கள் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும்போது, ஆற்றின் அகலம், நீர் வெளியேற்றம், நீர்வரத்து, மழையின் அளவு, மண்ணின் தன்மை, பாலத்தின் நேர்பாடு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், பாலப்பணிகள் நடைபெறும் தளத்தில் களப்பணியாளர்கள் இல்லாமல் எவ்விதப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

மேலும் பாலப்பணிகளை கவனிக்க, “பாலம் கண்காணிப்புக் குழுமம்“ என்கிற தனி பிரிவு உருவாக்கப்படவுள்ளது. அதற்கு விரைவில் அரசாணை பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்து, பணிகளின் நிலைக்குறித்து, இக்குழுமத்தின் மூலம் ஒப்புதல் பெறவேண்டும் என்று உத்தரவிட்டார்.

தேர்தல் அறிக்கையில், அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் முடிக்கப்பட்ட பணிகளை தவிர, இதர அறிவிப்புகளை மார்ச் 31-க்குள் விரைந்து முடிக்க வேண்டும். அனைத்து நிலஎடுப்பு பணிகளையும் துரிதப்படுத்த வேண்டும். பிற துறைகளினால் சாலைப் பணிகள் காலதாமதம் ஏற்பட்டால் உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று ஆணையிட்டார்கள்.

முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டம் மற்றும் சி.ஆர்.ஐ.டி.பி. 2024-2025 இல் திட்ட பணிகளுக்கான பிரேரணைகள் தயாரிக்கும்போது, அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்களின் தொகுதி சம்மந்தமான கோரிக்கைகள் முன்னுரிமை அடிப்படையில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அதனை தலைமைப் பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

நாங்கள் என்ன ஒன்பதா? தவெகவுக்கு எதிராக கொதித்தெழுந்த திருநர்கள்

நடிகர் விஜய் தொடங்கிய தவெக அரசியல் கட்சிப் பணிகள் படு ஜோராக நடைபெற்று வரும் நிலையில், முதல்கட்டமாக கட்சிக்குள் என்னென்ன அணிகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியானது. மேலும் பார்க்க

பள்ளிகளில் பாலியல் தொல்லையா? தமிழக அரசின் புகார் எண்!

பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டால் புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்ணை தமிழக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்க... மேலும் பார்க்க

வங்கிகள் செய்திருக்கும் மிகப்பெரிய மாற்றங்கள்! தெரியாவிட்டால் பாக்கெட் காலி!!

இந்த பிப்ரவரி மாதம் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சத் தொகை அதிகரிப்பு, ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டது என நிதித்துறை சார்ந்த தகவல்கள் வந்துகொண்டேயிருக்கின்றன. மேலும் பார்க்க

காட்சிப்படுத்தப்பட்ட ஏசி புறநகர் ரயில்! பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

சென்னை: சென்னை ஐசிஎஃப் ரயில்வே தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஏசி புறநகர் ரயில் இன்று மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) அற... மேலும் பார்க்க

சாலைகளில் தேவையில்லாத வேகத்தடை அமைக்க வேண்டாம் : அமைச்சர் எ.வ. வேலு

சாலைகளில் தேவையில்லாத இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டாம், அவ்வாறு தேவைப்படின், அதற்கான அறிவிப்புப் பலகைகளுடன் அமைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் எ.வ. வேலு அறிவுறுத்தியுள்ளார்.நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ள... மேலும் பார்க்க

தமிழக அரசைக் கண்டித்து பிப். 18-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்!

தமிழக அரசை கண்டித்து, பிப். 18 ஆம் தேதி அதிமுக மாணவர் அணி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே வரு... மேலும் பார்க்க