` அனைவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை என ஒன்று இருக்கிறது' வைரலாகும் பிக்பாஸ் பவித்ராவின் பதிவு!
பிக்பாஸ் சீசன் 8
பிக்பாஸ் சீசன் 8-ல் போட்டியாளராக கலந்து கொண்டு இறுதிக்கட்டம் வரையிலும் பயணித்தவர் பவித்ரா ஜனனி. சின்னத்திரைக்கு பரிச்சயமான முகம். `தென்றல் வந்து எனைத் தொடும்' தொடருக்குப் பிறகு எந்த சீரியலில் நடிக்கப் போகிறார் எனப் பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று தனது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/xkr6whuh/My-go-to-place-paruvathamalai-rayanoffl-how-was-ur-trekking-experience-paruvathamalaiadiyen-anna-so-kind-of-u-thank-u-so-much-for-hosting-guiding-us-it-was-great-time-with-u-n-ur-family-greatfu.jpg)
பிக்பாஸ் வீட்டில் அன்பானவர் என்கிற டேக் இவருக்கே பொருந்தியிருந்தது. அத்தனை இயல்பாய் கடிந்து பேசாமல் எல்லாரையும் கவனிக்க வைத்தார். அவருடைய பொறுமை கூடுதலான ரசிகர்களை அவருக்கு உருவாக்கிக் கொடுத்தது. பவித்ரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு அவருடைய நண்பரும் பிக்பாஸ் போட்டியாளர்களுள் ஒருவருமான ரயானுடன் பர்வதமலைக்குச் சென்றிருக்கிறார். அந்தப் புகைப்படத்தை அவர் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு பல்வேறு எதிர்மறையான கமென்ட்கள் வந்த நிலையில் பவித்ரா அது குறித்து அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில்,
" வணக்கம். அனைவரும் நலம் என நம்புகிறேன். சில விஷயங்களை விரைவாக தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் அதனை புரிந்து கொண்டு நடப்பீர்கள் என நம்புகிறேன். எனது தனிப்பட்ட வாழ்க்கை, நண்பர்கள் மற்றும் அவர்களுடன் பயணம் செய்வது என் தனிப்பட்ட விருப்பம். சூழலைப் புரிந்து கொள்ளாமல் ஒரு சிலர் என்னைப் பற்றி கருத்துகளை பதிவிடுவது மிகவும் வேதனையளிக்கிறது. விரும்பத்தகாத வகையில் வேறொருவரையோ அல்லது வேறொரு ஃபேன் பேஜையோ குறிப்பிட்டு பதிவிடும் கமென்ட்ஸ்களை என் பக்கத்திலிருந்து நீக்கிவிட்டேன்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/xz1gjehi/IMG_4089.png)
நீங்கள் சில ஜோடிகளை பிக்பாஸ் வீட்டில் ரசித்திருக்கலாம்.. ஆனால் அதையும் தாண்டி அனைவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை என ஒன்று இருக்கிறது. அது யதார்த்தத்திலிருந்து பயங்கர வித்தியாசமானவை. எங்கள் பரஸ்பர ரசிகர் பக்கங்கள் அனைத்தும் இதையே மதிக்கின்றன என நான் உண்மையாக நம்புகிறேன். எனக்கான இடத்தை எனக்குக் கொடுங்கள்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தப் பதிவு சமூகவலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play