Siragadikka aasai : முத்துவிடம் சிக்கும் மலேசியா மாமா... ரோகிணிக்கு புதிய சிக்கல்!
Siragadikka aasai
சிறகடிக்க ஆசை சீரியலில் இந்த வார ப்ரோமோவில் ரோகிணியின் அம்மாவை முத்து பார்த்துவிடுகிறார். மலேசியா மாமாவாக மணி அண்ணாமலையின் நண்பர் வீட்டிற்கு வருகிறார்.
கடந்த வார எபிசோடுகளில் மீனாவின் தொழிலை கெடுக்க சிந்தாமணி விஜயாவை தூண்டி விட்டது, முத்துவை பழிவாங்க நினைக்கும் ட்ராஃபிக் போலீஸ் அருணுக்கு சீதாவுடன் நட்பு ஏற்பட்டது, ஸ்ருதி ரவி திருமண நாள் குழப்பம் என ஸ்வாரஸ்யமாக நகர்ந்தது.
விஜயா - சிந்தாமணி சூழ்ச்சிகளை தாண்டி மீனா பெரிய மண்டபத்தின் அலங்கார வேலையை முடித்துவிட்டார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/te5y53nz/mgj.png)
இந்த வாரம் இரண்டு ப்ரோமோக்கள் வெளியாகி உள்ளன. முதல் ப்ரோமோவில் ரோகிணியின் அம்மாவை க்ருஷ் படிக்கும் பள்ளியில் வைத்து முத்து பார்த்துவிடுகிறார்.
அண்ணாமலை வாரத்திற்கு ஒரு முறை அந்த பள்ளிக்கு கணக்கு வழக்குப் பார்க்கும் வேலைக்கு செல்கிறார். எனவே அண்ணாமலை கண்ணில் க்ருஷ் படக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு வியாழக்கிழமையும் க்ருஷ் பள்ளிக்கு லீவ் போட வேண்டும் என ரோகிணி அம்மாவிடம் சொல்கிறார்.
தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் அண்ணாமலை பள்ளிக்கு வரும்போது மதிய உணவை எடுத்து வர மறந்துவிடுகிறார். அதனை கொண்டு வந்து கொடுக்க வரும் முத்து க்ருஷையும் பாட்டியையும் பார்த்துவிடுகிறார். நீங்க இங்க தான் இருக்கீங்களா என்று அதிர்ச்சியாகிறார். ரோகிணியின் அம்மாவும் மகளுடன் இங்கு இருப்பதாக சொல்லி சமாளிக்கிறார். இந்த விஷயத்தை ரோகிணியிடன் கால் செய்து சொல்கிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/tdpue0db/ghnm.png)
மற்றொரு ப்ரோமோவில் அண்ணாமலையின் நண்பர் பரசு வீட்டிற்கு வருகிறார். தனது மகள் கடிதம் எழுதிவிட்டு காதலருடன் வீட்டை விட்டு சென்றுவிட்டதாக சொல்லி அழுகிறார். முத்துவும் மீனாவும் பரசுவின் மகளை சமாதானப்படுத்தி அழைத்து வருவதாக சொல்லி சமாதானப்படுத்துகின்றனர்.
பரசுவின் மகள் காதலிக்கும் அந்த இளைஞரின் குடும்பத்திற்கு நெருங்கிய உறவினர் தான் மலேசியா மாமாவாக நடித்த மணி என்பது தான் இதில் புதிய ட்விஸ்டு. முத்து பரசுவின் மகளை தேடிக் கண்டுப்பிடித்து அழைத்து வருகிறார். மற்றொருபுறம் மலேசியா மாமா பரசுவின் வீட்டிற்கு அந்த இளைஞரை அழைத்து வருகிறார். அப்போது அங்கு முத்து இருக்கிறார். மலேசியா மாமா முத்துவிடம் சிக்கி கொள்வாரா? ரோகிணி அண்ணாமலையிடம் சிக்கி கொள்வாரா என்பது அடுத்தடுத்த எபிசோடுகளில் தெரியவரும்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play