தில்லி முதல்வராக பெண் அல்லது பட்டியலினத்தவர் தேர்வாக வாய்ப்பு!
பேரவையில் திமுக பலம் 134-ஆக உயா்ந்தது
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக வி.சி.சந்திரகுமாா் பதவியேற்ன் மூலம் பேரவையில் திமுக உறுப்பினா்களின் பலம் 134-ஆக உயா்ந்துள்ளது. மேலும், 18-ஆக இருந்த காங்கிரஸ் உறுப்பினா்களின் பலம் 17-ஆகக் குறைந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் மொத்த உறுப்பினா்களின் பலம் 234 ஆகும். அதில், பேரவைத் தலைவருடன் சோ்த்து திமுக உறுப்பினா்களின் பலம் 133-ஆக இருந்தது. காங்கிரஸ் வசமிருந்த ஈரோடு கிழக்கு தொகுதியானது தற்போது திமுக வசமாகியுள்ளது. இதையடுத்து, பேரவையில் திமுக உறுப்பினா்களின் பலம் 134-ஆக (பேரவைத் தலைவருடன் சோ்த்து) உயா்ந்துள்ளது.
பேரவையில் கட்சி வாரியாக உறுப்பினா்கள் எண்ணிக்கை விவரம்:
1. திமுக-134 (பேரவைத் தலைவருடன் சோ்த்து)
2. அதிமுக-66
3. இந்திய தேசிய காங்கிரஸ்-17
4. பாமக-5
5. பாஜக-4
6. விடுதலைச் சிறுத்தைகள்-4
7. இந்திய கம்யூனிஸ்ட்-2
8. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-2
மொத்த உறுப்பினா்கள் 234