Valentine's Day: 'ஒரு முத்தத்தில் 12 கலோரிகள்...' - முத்தம் கொடுப்பதால் இத்தனை ந...
கான்பூர் ஐஐடியில் பி.எச்டி. மாணவர் தற்கொலை! ஓராண்டில் 3-வது சம்பவம்!
கான்பூர் ஐஐடியில் பி.எச்டி. பயிலும் மாணவர் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நொய்டாவைச் சேர்ந்த அங்கித் யாதவ்(வயது 24) என்ற இளைஞர் கான்பூர் ஐஐடியில் வேதியியல் துறையில் பி.எச்டி. ஆராய்ச்சி செய்து வருகிறார்.
அவரது நண்பர்கள் திங்கள்கிழமை மாலை அங்கித் யாதவுக்கு நீண்ட நேரம் போன் செய்தும் அவர் பதிலளிக்கவில்லை. மேலும், அவரது விடுதி அறையும் உள்புறமாக பூட்டி இருந்ததால் காவல்துறைக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : அதிரடி உயர்வு! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை!!
சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் அறையை திறந்து பார்த்ததில், அங்கித் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய காவல்துறையினர், தடயவியல் நிபுணர்களை கொண்டு விடுதி அறையில் ஆய்வு செய்தனர்.
மேலும், அங்கித் எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதம் போலீஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், எனது முடிவுக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மாணவரின் தற்கொலைக்கான காரணத்தை கண்டறிய காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கான்பூர் ஐஐடியில் கடந்தாண்டு அக். 10ஆம் தேதி பிரகதி கர்யா என்ற பி.எச்டி. மாணவியும், ஜன. 18ஆம் தேதி பிரியங்கா ஜெய்ஸ்வால் என்ற பி.எச்டி. மாணவியும் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.