மீண்டும் பிளாஸ்டிக்: ‘பேப்பர் ஸ்ட்ரா’ வேலைக்காகாது! -டிரம்ப் அதிரடி!
ஷ்ரத்தா வாக்கரின் தந்தை மரணம்! நீதி கேட்டு போராடியவர்
தில்லியில், திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த காதலனால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா வாக்கரின் தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டு காதலனால் படுகொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா தாஸ் வழக்கில், அஃப்தாப் பூனாவாலா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தனது மகள் கொலை வழக்கில், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தொடர்ந்து அழுத்தம் கொடுத்து, மகளின் சாவுக்கு நியாயம் கேட்டு தொடர்ந்து போராடி வந்த தந்தை விகாஸ் வாக்கர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலம் பல்கார் மாவட்டத்தில் தனது இல்லத்தில் உறக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
வீட்டை விட்டு காதலனுடன் வெளியேறி தில்லியில் வசித்து வந்த ஷ்ரத்தா வாக்கர், காதலனால் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பல துண்டுகளாக வெட்டி காட்டுப் பகுதிகளில் வீசப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 6,629 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை தில்லி காவல்துறை தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மகளின் இருப்பிடம் தெரியாமல், காவல்துறையினருக்குப் புகார் தெரிவித்திருந்த விகாஸ் வாக்கர், மகளின் மரணத்துக்கு நியாயம் கேட்டுப் போராடி வந்த நிலையில், அவரும் மாரடைப்பால் மரணம் அடைந்திருப்பது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.