செய்திகள் :

கும்பமேளா: ரயிலில் இடம் கிடைக்காததால் ஏசி பெட்டிகளில் ஜன்னல்களை உடைத்து நுழைந்த பயணிகள்!

post image

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டுள்ளது.

அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிவிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் லட்சக்கணக்கான பக்தர்களில் ஒருபகுதியினர் தங்கள் சொந்த வாகனங்களிலும் பிறர் பொது போக்குவரத்து சேவையையும் சார்ந்துள்ளனர்.

அப்படியிருக்கையில், பிரயாக்ராஜுக்கு போதிய எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப்படாததால் கூட்டம் அலைமோதுகிறது. பயணிகள் பலருக்கு ரயில்களில் இடம் கிடைக்காததால் அவர்கள் இன்ஜின் மீது ஏறிச் செல்ல முற்பட்டதையும் காண முடிந்தது. நல்வாய்ப்பாக விபத்துகளும் அசம்பவிதங்களும் தவிர்க்கப்பட்டுள்ளன.

இதனிடையே, பிகார் மாநிலம் மதுபானி ரயில் நிலையத்தில் நேற்று(பிப். 10) நின்று கொண்டிருந்த, ஜெயா நகரிலிருந்து பிரயாக்ராஜ் வழியாக புது தில்லிக்கு செல்லும் சுவதந்திரதா சேனானி எக்ஸ்பிரஸ்(12561) ரயிலில் இடம்பிடிக்க பயணிகள் போட்டி போட்டுக்கொண்டு முண்டியடித்தனர். இதன் காரணமாக நெரிசலும் தள்ளுமுள்ளும் உண்டானது.

ரயிலில் இடம் கிடைக்காத விரக்தியில் பயணிகள் சிலர், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். இதனால் அங்கிருந்து ரயில் புறப்பட்டுச் சென்ற பின்னரும் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதை காண முடிந்தது.

எனினும், சம்பவ இடத்துக்கு ரயில்வே பாதுகாப்புப் படை(ஆர்பிஎஃப்) காவலர்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு ரயில் நிலையத்தில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், ரயில் மீது கற்களை வீசி எறிந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த ரயில், உடைந்த ஜன்னல் கண்ணாடிகளுடனே இயக்கப்பட்டதால், சமஸ்திபூர் ரயில் நிலையத்தை ரயில் சென்றடைந்ததும் பயணிகள் சிலர் இந்த ஜன்னல்கள் வழியாக ஏசி வகுப்பு பெட்டிகளுக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.

தனியார் கிடங்கிலிருந்து 400 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல்!

இந்தூர்: இந்தூர் நிர்வாகமானது தனியார் கிடங்கிலிருந்து சுமார் 400 குவிண்டால் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.இந்தூர்-உஜ்ஜைன் சாலையில் உள்ள கிடங்கில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டு, குஜராத்துக்கு அன... மேலும் பார்க்க

தெலங்கானா: இன்றுமுதல் பீரின் விலையில் 15% உயர்வு!

தெலங்கானாவில் பீரின் விலையில் 15 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.தெலங்கானாவில் பீர் விலையை அதிகரிக்குமாறு கோரிய யுனைடெட் ப்ரூவெரிஸின் கோரிக்கையால் பீர் விலையில் 15 சதவிகிதம்வரையில் அதிகரித்து தெலங்கானா ... மேலும் பார்க்க

4 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய கல்யாணராமன் கைது!

இன்றைய இளைஞர்கள் பலர் திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் தவிக்கும் சூழலில், கேரளத்தைச் சேர்ந்தவொரு வாலிபர் இளம்பெண்கள் நால்வரை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்திருப்பது தெரிய வந்துள்ளது... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற ஆசிரியை.. கண்ணியத்துடன் இறக்கும் உரிமையைப் பெறப்போகும் முதல் ஆள்!

தேவநாகரி: கர்நாடக மாநிலத்தில் பல்வேறு சட்டப்போராட்டங்களுக்குப் பின், ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை காரிபசம்மா (85) கண்ணியத்துடன் இறக்கும் உரிமையைப் பெறும் முதல் ஆளாக மாறப்போகிறார்.கண்ணியத்துடன் இறக்... மேலும் பார்க்க

கட்சிவிட்டுக் கட்சி தாவுவது காங்கிரஸ் கலாசாரம்! -ஆம் அத்மி

புது தில்லி : ஆம் ஆத்மி கட்சிக்குள் எந்தவொரு சலசலப்பும் இல்லை என்று பஞ்சாப் மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற... மேலும் பார்க்க

விருந்து விஷமானது: உ.பி.யில் 40 பேர் உடல்நல பாதிப்பு!

உத்தரப் பிரதேசத்தின் ஃபரித்பூர் கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் விருந்து சாப்பிட்ட சுமார் 40 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றுள்ள... மேலும் பார்க்க