சரியும் Stock Market-ல் முதலீடு செய்வது புத்திசாலித்தனமா? | IPS finance - 136 | ...
பாகிஸ்தானில் 5 பயங்கரவதிகள் சுட்டுக் கொலை!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தடைசெய்யப்பட்ட தலிபான் அமைப்பைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
கரக் மாவட்டத்தில் உள்ள மிர் கலம் பண்டாவில் தேடப்படும் பயங்கரவாதிகள் இருப்பதாக உளவுத்துறை அளித்த தகவல்களின்பேரில் திங்கள்கிழமை இரவு காவல்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புத் துறை (சிடிடி) இணைந்து கூட்டு நடவடிக்கை மேற்கொண்டன.
இந்த நடவடிக்கையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால் 10-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் தப்பி ஓடியதாகத் தெரிவித்தனர். பயங்கரவாதிகள் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானின் கக்கீமுல்லா குழுவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து போலீஸார் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைப் பறிமுதல் செய்தனர்.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, தப்பியோடியவர்களைக் கண்டுபிடிக்க கோஹத் மாவட்ட காவல்துறையும், பயங்கரவாத எதிர்ப்புத் துறையும் கூட்டுத் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் குறிப்பாக கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது.