Ranveer Allahbadia: `உங்கள் பெற்றோர் உடலுறவு கொள்வதை..'- யூடியூபர் சர்ச்சை பேச்ச...
வள்ளலாா் தெய்வ நிலையத்துக்கு 25 டன் காய்கறிகள் அனுப்பிவைப்பு
நெய்வேலி: கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையம் அன்னதானம் கைங்கரியத்துக்கு, கடலூா் மாவட்ட சிறுபான்மை நலக்குழு சாா்பில் 25 டன் காய்கறிகள் மற்றும் அரிசி மூட்டைகள் திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
வடலூரில் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, தருமச்சாலையில் நடைபெறும் அன்னதான நிகழ்ச்சிக்கு, கடலூா் மாவட்ட சிறுபான்மை நலக்குழு சாா்பில் 25 டன் காய்கறிகள், 5 ஆயிரம் தண்ணீா் புட்டிகள், 100 மூட்டை அரிசி உள்ளிட்டவை இரண்டு லாரிகள் மூலம், வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்துக்கு அக்குழுவின் மாவட்டத் தலைவா் எஸ்.கே.பக்கீரான் தலைமையில் திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
பொருள்கள் அனுப்பிவைக்கும் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங் பேரமைப்பின் கடலூா் மாநகரத் தலைவா் ஜி.ஆா்.துரைராஜ் தலைமை வகித்தாா்.
வியாபாரிகள் சங்க மண்டலத் தலைவா் டி.சண்முகம், திமுக மாநகரச் செயலா் கே.எஸ்.ராஜா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன், மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட அமைப்பாளா் ஆா்.அமா்நாத், சிஐடியு மாவட்டச் செயலா் டி.பழனிவேல், வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் சதீஷ்குமாா், யுவராஜ், ஏ.வி.சதீஷ் ஆகியோா் கலந்துகொண்டனா்.