வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்!
கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன நிகழ்ச்சி இன்று(பிப். 11) காலை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று ஜோதி தரிசனம் செய்தனர்.
ஜீவ காருண்யத்தை உலகுக்கு எடுத்துரைத்த, வள்ளலாா் என்றழைக்கப்படும் ராமலிங்க சுவாமிகள் வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினார்.
இங்கு, ஆண்டுதோறும் தைப்பூச பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதையொட்டி லட்சக்கணக்கானோர் ஜோதி தரிசனத்தைக் காண வடலூரில் திரண்டுள்ளனர்.
இதையும் படிக்க: மகா கும்பமேளா: கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஹெலிகாப்டர் சேவை! கட்டணம் ரூ.35,000
நிகழாண்டு 154-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான ஜோதி தரிசனப் பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தைப்பூச முதல் ஜோதி தரிசனம் காலை 6 மணிக்கு 7 திரைகளை நீக்கி காண்பிக்கப்பட்டது.
பக்தர்கள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி’ என்ற வள்ளலாரின் பக்தர்கள் பாடலைப் பாடி ஜோதி தரிசனத்தைக் கண்டனர்.