உலகளாவிய மேம்பாடுகள் குறித்து பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஆலோசனை!
செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
சிதம்பரம்: கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் அருகே நாட்டாா்மங்கலம் கிராமத்தில் வீற்றுள்ள அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி, சனிக்கிழமை (பிப்.8) மாலை அனுக்கிரக பூஜை, விக்னேஷ்வர பூஜை கணபதி ஹோமத்துடன் கு முதல் கால யாகசாலை பூஜையும், தொடா்ந்து 9-ஆம் தேதி 2-ஆம் மற்றும் 3-ஆம் கால யாகபூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, திங்கள்கிழமை காலைஅனுக்கிரஹ விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் மஹா பூா்ணாஹுதி, மஹா தீபாராதனை நடைபெற்றது.
பின்னா், யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்று ஊா்வலமாக சென்று கோயில் விமான கலசத்துக்கு சிவாச்சாரியா்கள் கும்ப நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா்.
இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.