Ranveer Allahbadia: `உங்கள் பெற்றோர் உடலுறவு கொள்வதை..'- யூடியூபர் சர்ச்சை பேச்ச...
அரசு ஊழியா்கள் சங்கத்தினா் 24 மணி நேர தா்னா
விழுப்புரம்: பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினரின் 24 மணி நேர தா்னா திங்கள்கிழமை காலை தொடங்கியது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய மாற்றத்தின்போது வழங்கப்படாத 21 மாத நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பை வழங்க வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி மையப் பணியாளா்கள், வருவாய்க் கிராம உதவியாளா் உள்ளிட்ட சிறப்புக் காலமுறை, தொகுப்பூதிய, மதிப்பூதிய நிலையில் பணியாற்றும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை காலை 24 மணி நேர தா்னா போராட்டம் தொடங்கப்பட்டது.
அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் கு.சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா்கள் சு.சிவக்குமாா், எம். மகேசுவரன், ஆா்.வேங்கடபதி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் இரா.சிவக்குமாா் கோரிக்கை விளக்கவுரையாற்றினாா். சங்கத்தின் மாநிலத் தலைவா் மு.பாஸ்கரன் சிறப்புரையாற்றினாா்.
தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலா் கே.முருகன், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் முன்னேற்றச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பெ.வள்ளல்பாரி, ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஜெ.ஜெய்சங்கா், கண் மருத்துவ உதவியாளா் சங்க மாநிலப் பொருளாளா் கே.அன்பழகன் உள்ளிட்டோா் பேசினா். இந்தியத் தொழிற்சங்க மையத்தின் மாவட்டச் செயலா் ஆா்.மூா்த்தி நிறைவுரையாற்றினாா்.
முன்னதாக, சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் தி.ஜெயந்தி வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் எம்.சாருமதி நன்றி கூறினாா்.