எஸ்கே - 23 டீசர் அப்டேட்!
சிவகார்த்திகேயன் - ஏ. ஆர். முருகதாஸ் படத்தின் டீசர் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால் மற்றும் பிஜு மேனன் நடிக்கின்றனர்.
படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதற்கிடையே, திடீரென நடிகர் சல்மான் கானின் சிக்கந்தர் படத்தை இயக்க ஏ. ஆர். முருகதாஸ் மும்பை சென்றார்.
இதையும் படிக்க: ‘நம்பவே முடியவில்லை தங்கச்சி...’ வருத்தத்தைப் பகிர்ந்த வெங்கட் பிரபு!
இதனால், சில வாரங்கள் எஸ்கே - 23 படத்தின் படப்பிடிப்பு நிகழாமல் இருந்தது. பின், மீண்டும் சில நாள்கள் நடைபெற்றது. பொங்கலை முன்னிட்டு டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை.
இந்த நிலையில், எஸ்கே - 23 டீசரை பிப். 17 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.