மோகன்லால் - மாளவிகா மோகனன் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!
நடிகர்கள் மோகன்லால், மாளவிகா மோகனன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
நடிகர் மோகன்லால் நடித்த எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சத்யன் அந்திகாட் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கிறார்.
‘ஹ்ருதயப்பூர்வம்’ எனப் பெயரிட்டுள்ள இப்படத்தில் இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: எஸ்கே - 23 டீசர் அப்டேட்!
தமிழில் விஜய்க்கு ஜோடியாக நடித்த மாளவிகா முதல்முறையாக மலையாளத்தின் நட்சத்திர நடிகருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. இயக்குநர் சத்யன் அந்திகாட் நடிகர் மோகன்லால் கூட்டணியில் 10க்கும் மேற்பட்ட படங்கள் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.