`இல்லாத பிரச்னை' பெரும்பாலான இந்திய மனைவிகளுக்கு இது தெரிவதில்லை..! | காமத்துக்க...
Vijay: `பணக்கொழுப்பு; தனிப்பட்ட விருப்பம்'- விஜய் - PK சந்திப்புக்கு அரசியல் கட்சிகளின் ரியாக்சன்
தவெக தலைவர் விஜய்யும் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோரும் சமீபத்தில் சந்தித்து முக்கியமான ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். பிரஷாந்த் கிஷோர் விஜய்யின் கட்சிக்காக வியூகங்களை வகுத்துக் கொடுக்கவிருப்பதாக தகவல்களும் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில், விஜய், பிரஷாந்த் கிஷோர் சந்திப்புப் பற்றி பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களின் கருத்துகளை முன்வைத்திருக்கின்றனர். விஜய் நடத்தியிருக்கும் முக்கிய மீட்டிங் குறித்த அவர்களின் ரியாக்சன் இங்கே.
![ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர்](https://gumlet.vikatan.com/vikatan/2022-08/6a06ba0a-9818-4873-9719-8de360f44c64/jayakumar_.jpg)
'தனிப்பட்ட விருப்பம் - அதிமுக'
விஜய் ஒரு கட்சியைத் தொடங்கியிருக்கிறார். கட்சி ஆரம்பிக்கும் எல்லாருக்குமே ஆட்சியை பிடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதற்காக பிரஷாந்த் கிஷோரைச் சந்தித்திருக்கிறார். அதிமுகவுக்கென்று அடிப்படையான ஒரு வாக்கு வங்கி இருக்கிறது. அந்த வாக்காளர்கள் வேறு எந்தப் பக்கமும் செல்லமாட்டார்கள். விஜய் எங்களுக்கு எதிரியல்ல. பிரஷாந்த் கிஷோரை சந்தித்துப் பேசியது அவரது தனிப்பட்ட விருப்பம்.
- அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
'மக்களுடன்தான் கூட்டணி - திமுக'
'மக்களின் அன்பைப் பெற்றவர்களுக்கு மக்களோடு பயணிப்பவர்களுக்கு இந்த வியூக மன்னர்களால் எத்தகைய பலன் இருக்குமென தெரியவில்லை. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் மக்களோடு கூட்டணி வைத்திருக்கிறோம். அதனால்தான் ஈரோடு கிழக்கில் எதிர்த்து நின்ற அனைவரும் டெபாசிட்டை இழந்தனர். 2026 இல் மாண்புமிகு தமிழக முதல்வரின் எண்ணப்படி 200 ஐ தொட்டு மீண்டும் உறுதிமிக்க ஆட்சியை அமைப்போம்.
- அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
'அரசியல் டிஜிட்டலாகிவிட்டது - பாமக'
அரசியலும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. ஒரு கிளைச் செயலாளர் என்னிடம் பேச வேண்டுமானால் உடனடியாக தொழில்நுட்பங்களின் வழியாக பேச முடிகிறது. ஆக, இந்த காலக்கட்டத்தில் இதையெல்லாம் முறைப்படுத்த ஒரு கட்சிக்கு வியூக வகுப்பாளர் தேவைதான்.
- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
'பசி தெரியுமா - பா.ஜ.க'
யார் யாரை எத்தனை முறை சந்தித்தாலும் எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் மக்களை சந்திக்கிறோம். கீழே உள்ள மக்களை சந்திக்கையில் ஏசி அறையில் இருந்துக்கொண்டு வியூக வகுப்பாளரை சந்திக்க வேண்டிய தேவை இருக்காது. தெருவுக்கு வந்து மக்களை சந்தியுங்கள். எங்கிருந்தோ வந்தவர் மாத சம்பளத்து ஆட்களை அமர்த்தி சர்வே எடுத்து வியூகம் வகுக்கிறார். அவர்களுக்கு ஏழை மக்களின் பசி தெரியுமா?
- பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை
![அண்ணாமலை](https://gumlet.vikatan.com/vikatan/2025-01-12/fuqgrjw7/Annamalai.jpg)
'பணக்கொழுப்பு - நாதக'
வியூக வகுப்பாளர்கள் விஷயத்திலெல்லாம் எனக்கு உடன்பாடில்லை. நாட்டை சிறப்பாக ஆட்சி செய்த முன்னோர்களான காமராஜர், அண்ணா, குமாரசாமி, ஓமந்தூரார் ஆகியோரெல்லாம் வியூக வகுப்பாளர்களை வைத்துக் கொள்ளவில்லை. என் நாடு, என் நிலம், என் மக்களைப் பற்றித் தெரியாவதர்கள் எதற்கு இங்கே வர வேண்டும். என்னிடம் மூளை இருக்கிறது, பணம் இல்லை. எனக்கு வியூக வகுப்பாளர்களெல்லாம் தேவை இல்லை. பிரஷாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டைப் பற்றி அதன் பிரச்னைகளைப் பற்றி என்ன தெரியும்? பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால்தான் இதெல்லாம் தேவைப்படும்.
- நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்
விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து உங்களின் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!