சமனில் முடிந்தும் அரையிறுதிக்கு முன்னேறிய கேரளா..! எப்படி சாத்தியம்?
Valentine's Day: அரேஞ்ச்ட் மேரேஜிலும் பொங்கும் காதல்; இதெல்லாம் நீங்க செய்திருக்கிறீர்களா?
சில்லுனு ஒரு காதல், தாண்டவம், கலாப காதலன்... இப்படி அரேஞ்ச்ட் மேரேஜ் கதைக் களத்தைக் கொண்ட படங்களோட சீன்களை எடுத்து வெட்டி, ஒட்டி வரும் அரேஞ்ச்ட் மேரேஜ் ரீல்ஸ்கள் இப்போது சோசியல் மீடியாவில் டாப் ட்ரெண்டில் உள்ளது.
லவ் மேரேஜ் மட்டுமல்ல... அரேஞ்ச்ட் மேரேஜிலும் காதல் உண்டு என்பதுதான் இந்த ரீல்ஸ்களின் மையம். 'அப்படியா?' என்றால் 'நிச்சயம் அப்படி தான்'. லவ் மேரேஜில் எப்படி சொட்ட சொட்ட லவ் உள்ளதோ, அதே அளவு கா......தல் அரேஞ்ச்ட் மேரேஜிலும் உள்ளது.
'வெறும் 5 நிமிச பேச்சுல ஒரு ஆளை செலக்ட் பண்ணிட முடியாமா?'ங்கறது இப்போது அதிகம் கேட்கப்படற பொது கேள்வி. லவ் அட் ஃபர்ஸ்ட் சைட், பல்ப் எறியுறது, வயித்துல பட்டாம்பூச்சி பறக்கறது, ஏதோ ஒரு ஸ்பார்க் மாதிரியான விஷயங்கள் லவ் மேரேஜில் எப்படி சாத்தியமோ, அதே மாதிரியான சாத்தியம் அரெஞ்ச்ட் மேரேஜுக்கும் பொருந்தும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2021-11/d39dde18-04ef-4db3-b4c9-4cfb42bf78c5/Voice_Message.jpg)
நம்ம மேலோட்டமா பாக்கும்போது, வெறும் 5 நிமிசம் தான் பேச்சுனு தோணும். ஆனா, நல்லா பாத்தா, லவ் மேரேஜுகளுக்கு இணையான பேச்சுகள் இந்தக் காலத்துல அரேஞ்ச்ட் மேரேஜ்லயும் நடக்குது.
பொண்ணு பாத்து, பேசி பிடிச்ச அடுத்த நிமிசமே, ரெண்டு பேருக்கும் இடையில போன் நம்பர்கள் மாத்தப்பட்டிருக்கும். ஆனா, அது நேரடியா இருக்காது. பொண்ணு அவங்க கூடப் பிறந்தவங்க கிட்ட சொல்லியும், பையன் அவங்க கூடப் பிறந்தவங்க கிட்ட சொல்லியும் போன் நம்பர்களை வாங்கியிருப்பாங்க.
ஒண்ணும் தெரியாத சமத்து பிள்ளைங்க மாதிரி பொண்ணு பாக்கற படலத்துல இருந்துட்டு, வீட்டுக்குப் போனதும் 'ஹாய்... நான் தான். நம்பரை சேவ் பண்ணிக்கோ'னு பையன் அனுப்புற அந்த முதல் மெசேஜ், பொண்ணுக்கு வேற லெவல் ஃபீலை அள்ளிக்கொடுக்கும்.
இந்த மெசேஜ் அந்தன்னைக்கு ராத்திரியே போன் காலா மாறியிருக்கும். 'என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது, சின்ன வயசுல நடந்த விஷயம், கல்யாணத்துக்கு என்ன கலர் டிரஸ்.....'னு ஒவ்வொரு போன் கால்கள்லயும் ஒவ்வொரு புது டாப்பிக்குகள் களைகட்டும்.
இடையில, அப்பப்ப சின்ன சின்ன கிஃப்டுகள், வீட்டுக்குத் தெரியாத சந்திப்புகள் - இது எல்லாமே லவ் மேரேஜுக்கு சற்றும் குறையாதது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/j3yo94lm/38495_thumb.jpg)
ஆமா... பாக்கும்போது அவங்க யார்னு தெரியவே தெரியாது தான். ஆனா, இந்த மெசேஜ்கள், நீ.....ண்ட கால்கள், குட்டி குட்டி சந்திப்புகள் அவர்களை நிச்சயம் பரிச்சயமாக்கும். அப்பவே, நமக்கு ஏத்தவங்களா, இல்லையானு அவங்க ரெண்டு பேரும் முடிவு பண்ணிடுவாங்க.
சில வீடுகள்ல ரொம்ப ஸ்ட்ரிக்டா இருப்பாங்க. பேசிக்கவே முடியாது. அப்போ கூட வீட்டுக்குத் தெரியாம பேசிக்கிற போன் கால் வேற லெவல் திரில்.
இளவரசன் வந்து இளவரசிய குதிரை வண்டில தூக்கிட்டுப்போன அற்புத அனுபவங்கள் மட்டுமே இங்கே இருக்காது. சண்டை, பொசசிவ்னஸ்... எல்லாம் இதுலயும் இருக்கத்தான் செய்யும். அது அந்த உறவை இன்னும் பலம் ஆக்கும்.
'அப்போ என்ன அரேஞ்ச்ட் மேரேஜ் தான் பண்ணிக்குணுமா?'னு கேட்டா, நிச்சயம் 'பெரிய நோ' தான் பதில். 'அரேஞ்ச்ட் மேரேஜா, லவ் மேரேஜா?'-ங்கறது அவங்க அவங்க விருப்பம். ஆனா, எதுவா இருந்தாலும் 'லவ்' முக்கியம் பாஸ்.
எந்த மேரேஜா இருந்தாலும், 'உங்க பார்ட்னரை தேர்ந்தெடுக்கறது' லவ்வ விட மிக முக்கியம். 'அவங்களுக்குப் பிடிச்சிருக்கு... இவங்களுக்குப் பிடிச்சிருக்கு', 'காதலுக்கு லாஜிக் தேவை இல்லை', 'எனக்கும் ஒரு ஆள் வேணும்', 'என்னடா நம்ம கிளாஸ் மேட்டுக்கெல்லாம் கல்யாணம் ஆகுது'ங்கற மாதிரியான காரணங்கள் இல்லாமல், 'நீங்கள் இப்போ கல்யாணத்துக்கு ரெடியா?', 'நீங்க தேர்ந்தெடுத்துருக்கற ஆள் உங்களுக்கானவரா?' என்பதை பார்த்து முடிவு செய்யுங்க. இது சரியா அமைஞ்சாலே, காதல் தானா வந்துரும்.
பலர் சொல்ற மாதிரி 'காதலுக்கு லாஜிக் தேவை இல்லை' தான். ஆனா, வாழ்க்கைக்கு பிராக்டிக்காலிட்டி ரொம்ப ரொம்ப முக்கியம். இதை மறந்திடவே மறந்துறாதீங்க.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/hv5thd01/1549612135-8127.avif)
லவ் அல்லது அரேஞ்ச்ட் டு மேரேஜ் கட்டத்தைத் தாண்டினதும், நீங்க கட்டாயம் ஃபாலோ பண்ண வேண்டிய கோல்டன் ரூல் என்னனா...
'என்னோட காதல் எனக்கு தெரியும்'னு இல்லாம, சின்ன சின்ன சர்ப்ரைஸ், குட்டி பாராட்டுகள் மூலம் உங்களோட இணைக்கு உங்கள் காதலைக் காட்டுங்க. உங்களுக்குக் காதலைக் காட்டறது தேவை இல்லாததா இருக்கலாம். ஆனா, உங்க இணைக்கு மிக முக்கியமான ஒன்றா இருக்கலாம். அப்புறம் இதை 'ஆண் தான் பண்ணணும்னு இல்ல'. காதல் எப்படி ஆண், பெண்ணுக்குச் சமமோ, அப்படித்தான் சர்ப்பரைஸுகள், பாராட்டுகள் இரண்டு பேருக்குமே சமம்.
சர்ப்பரைஸ், பாராட்டுனு சொன்னதும் காஸ்ட்லியா இருக்கணும்னு இல்ல... வீட்டுக்குப் போற வழில ஒரு பத்து ரூபாய் சாக்லேட் வாங்கிட்டு போய், 'உனக்குப் பிடிக்கும்ல... இந்தா சாப்பிடு'னு சர்ப்பரைஸா கொடுங்க. அது கொடுக்கற சந்தோஷம்... சர்ப்பரைஸ் பி.எம்.டபிள்யூ கார் கூட கொடுக்காது.
'இந்த டிரஸ்ல செம்மையா இருக்க', 'சாப்பாடு சூப்பர்'னு பாராட்டுகளைக் கொட்டுங்க. கேசுவலா ஒரு லவ் சாங் பாடிட்டு இருக்கும்போது, அவங்க கிராஸ் பண்ணாங்கனா, 'உனக்குத்தான் இந்தப் பாட்டு'னு வெக்கப்பட வைங்க.
அவ்ளோ தான்... பொட்டில பூட்டி வைக்க பணம் இல்லை... இது 'லவ்வ்வ்வ்...' பாஸ்!