செய்திகள் :

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: மேலும் ஒருவர் உயிரிழப்பு

post image

சாத்தூர்: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சின்னவாடி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் பிப். 5 நிகழ்ந்த வெடிவிபத்தில் இருவர் பலியான நிலையில், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சின்னவாடி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் பிப். 5 இடைவேளைக்குப் பிறகு, ஓா் அறை பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. மேலும், அடுதடுத்து 7 அறைகள் வெடித்துச் சிதறின.

இந்த கோர விபத்தில் பட்டாசு ஆலையில் இருந்து துவாா்பட்டியைச் சோ்ந்த ராமலட்சுமி (50) உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது.

மகா கும்பமேளா: இதுவரை 46.25 கோடி மக்கள் புனித நீராடல்!

இந்த வெடி விபத்தில் அதிவீரன்பட்டியைச் சோ்ந்த வீரலட்சுமி (37), அவரது சகோதரி கஸ்தூரி (31), வைத்தீஸ்வரி (32), பொம்மையாபுரத்தைச் சோ்ந்த முருகேஸ்வரி (55), ஆவுடையாபுரத்தைச் சோ்ந்த மாணிக்கம் (54), மீனம்பட்டியைச் சோ்ந்த சைமன் டேனியல் (33) ஆகிய 6 போ் பலத்த காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீரலட்சுமி(35) சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை உயிரிழந்தார்.

அவரது சகோதரி கஸ்தூரி உள்பட 3 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அதிமுக விவகாரம்: செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை!

ஈரோடு: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிமுக இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்கள்: தலைமைச் செயலாளர் முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் குறித்து தலைமைச் செயலர் முருகானந்தம் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிர... மேலும் பார்க்க

தங்கம் விலை நிலவரம்: பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ. 960 குறைந்து ரூ. 63,520-க்கு விற்பனையாகிறது.அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாள் முதலே தங்கம் விலை வரலாறு காணாத வகையில... மேலும் பார்க்க

ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு: இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

2024-ஆம் ஆண்டுக்கான மிகவும் ஊழல் நிறைந்த நாடுகளின் கண்ணோட்ட குறியீடு தரவரிசைப் பட்டியலில் இந்தியாவுக்கு 96-ஆம் இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 93-ஆவது இடத்திலிருந்த இந்தியா, தற்போது மேலும் பின்னடைவைச்... மேலும் பார்க்க

புதிய வருமான வரி மசோதா நாளை மக்களவையில் தாக்கல்!

புது தில்லி: புதிய, எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி மசோதாவை நாளை(பிப்.13) மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதாவது 60 ஆண்டுகள் பழைமையான வருமான வரிச் சட்டத்துக்கு மாற்றாக புதிய வருமான வரி மசோதா தாக்... மேலும் பார்க்க

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

உளுந்தூர்பேட்டையில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் தற்கொலை செய்து கொண்டனா்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அஜீஸ் நகரைச் சேர்ந்தவர் முத்து.இவரது மனைவி தேவி, மகன் பிரவீன்குமார் ஆகியோர் தற்கெ... மேலும் பார்க்க