செய்திகள் :

தங்கம் விலை நிலவரம்: பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ. 960 குறைந்து ரூ. 63,520-க்கு விற்பனையாகிறது.

அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாள் முதலே தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயா்ந்து வருகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து உயர்ந்து வரும் நிலையில், சனிக்கிழமை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.63,560-க்கு விற்பனையானது.

அதைத்தொடா்ந்து வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.7,980-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.63,840-க்கு விற்பனையானது. செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து சவரன் ரூ. 64,480-க்கும் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ. 8060-க்கு விற்பனையானது.

இதையும் படிக்க | ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு: இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக அதிரடி விலை ஏற்றங்களை கண்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.960 குறைந்து, ரூ.63,520-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 7,940-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ. 1.30 குறைந்து ரூ.99.20-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,300 உயா்ந்து ரூ. 99,200-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலையில் தொடா்ந்து 7-ஆவது நாளாக எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.107-க்கும், கட்டி வெள்ளி கிலோ ரூ.1,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வார விடுமுறை நாள்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

வார விடுமுறை நாள்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.இது பற்றி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்... மேலும் பார்க்க

தமிழகத்திற்கு அண்ணாமலை நிதி பெற்றுத் தரலாமே! - அன்பில் மகேஸ்

ஒவ்வொரு முறையும் தில்லி செல்லும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக பள்ளி மாணவர்களுக்கு நிதி பெற்றுத் தரலாமே என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய அவர், "தமிழக பாஜக... மேலும் பார்க்க

பணக் கொழுப்பு இருந்தால் தேர்தல் வியூக நிபுணர்கள் தேவை: சீமான்

பணக் கொழுப்பு அதிகமாக இருந்தால் தேர்தல் வியூக நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

ரயானுடன் ஆன்மிக சுற்றுலாச் சென்ற பவித்ரா!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்த ரயான் மற்றும் பவித்ரா ஜனனி இருவரும் ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் டாப் 5 போட்டியாளர்களில் இருவர் பவித்ரா ஜனனி மற்றும் ரயான... மேலும் பார்க்க

தமிழ்நாடு முழுவதும் திமுகவிற்கு ஆதரவான சூழலே நிலவுகிறது: அமைச்சர் வி.செந்தில்பாலாஜி

தமிழ்நாடு முழுவதும் திமுகவிற்கு ஆதரவான சூழலே நிலவுகிறது; முதல்வர் ஸ்டாலின் அலைதான் தமிழ்நாடு முழுக்க அடித்துக் கொண்டிருகிறது என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள... மேலும் பார்க்க

அதிமுக விவகாரம்: செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை!

ஈரோடு: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிமுக இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட... மேலும் பார்க்க