செய்திகள் :

தமிழ்நாடு முழுவதும் திமுகவிற்கு ஆதரவான சூழலே நிலவுகிறது: அமைச்சர் வி.செந்தில்பாலாஜி

post image

தமிழ்நாடு முழுவதும் திமுகவிற்கு ஆதரவான சூழலே நிலவுகிறது; முதல்வர் ஸ்டாலின் அலைதான் தமிழ்நாடு முழுக்க அடித்துக் கொண்டிருகிறது என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல், மக்கள் நலனுக்காக அனுதினமும் உழைத்து வரும் முதல்வர் ஸ்டாலின் உழைப்பிற்கும், திராவிட மாடல் அரசுக்கும், பெரியாரை இகழ்ந்து அரசியல் செய்ய நினைத்தவர்களை ஓடவிட்ட தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி!

குரங்கு கையில் சிக்கிய பூமாலையாய் தன் கைக்கு கிடைத்த கட்சியை சீரழித்து சின்னாபின்னமாக்கி தோல்வி மேல் தோல்வி கண்டு தோல்விசாமி இல்லாத பொய்களை வீசுவதே அன்றாட அலுவலாக வைத்திருக்கிறார். அதனால்தான் மக்களை சந்திக்க முடியாமலும் திமுகழகத்தை எதிர்க்க துணிவில்லாமல் தேர்தலை சந்திக்காமல் ஓடி ஒளிந்துக் கொண்டார்.

அதிமுக விவகாரம்: செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை!

வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்லாமல் வாக்களிக்காத மக்களின் நலனுக்காகவும் இந்த அரசு பாடுபடும் என அறிவித்து செயல்பட்டார் முதல்வர்; அதன் காரணமாக இன்று ஈரோடு கிழக்கில் அதிமுக வாக்குகள் அனைத்தும் திமுகவிற்கு வந்துள்ளது.

தமிழ்நாடு முழுக்க திமுகவிற்கு ஆதரவான சூழலே நிலவுகிறது; முதல்வர் ஸ்டாலின் அலைதான் தமிழ்நாடு முழுக்க அடித்துக்கொண்டிருகிறது. இது 2026 தேர்தலிலும் எதிரொலிக்கும் என கூறியுள்ளார்.

ஆந்திரம்: பறவைகள் கண்காட்சி திடலில் தீ விபத்து!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள சிதாரா மைய கண்காட்சி திடலில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டது.இந்த திடலில் பறவைகள் கண்காட்சி நடைபெற்று வந்த நிலையில், கண்காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்த பறவைகளும், பெரிய அள... மேலும் பார்க்க

லாம் ரிசர்ச் இந்தியாவில் ரூ.10,000 கோடி முதலீடு: அஷ்வினி வைஷ்ணவ் தகவல்

புதுதில்லி: அமெரிக்காவைச் சேர்ந்த செமிகண்டக்டர் நிறுவனமான லாம் ரிசர்ச், இந்தியாவில் குறிப்பிடத்தக்க ரூ.10,000 கோடி முதலீட்டை அறிவித்துள்ளது என மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ... மேலும் பார்க்க

பாரிஸில் பிரதமர் மோடி - சுந்தர் பிச்சை சந்திப்பு

பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையும் பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்துக்கொண்டனர். இந்த சந்திப்பின்போது இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தில் கூகுள் நெர... மேலும் பார்க்க

பிப். 17-ல் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனை!

வருகிற பிப். 17 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு ... மேலும் பார்க்க

வார விடுமுறை நாள்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

வார விடுமுறை நாள்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.இது பற்றி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்... மேலும் பார்க்க

தமிழகத்திற்கு அண்ணாமலை நிதி பெற்றுத் தரலாமே! - அன்பில் மகேஸ்

ஒவ்வொரு முறையும் தில்லி செல்லும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக பள்ளி மாணவர்களுக்கு நிதி பெற்றுத் தரலாமே என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய அவர், "தமிழக பாஜக... மேலும் பார்க்க