இளம் வீரர்களுடன் களமிறங்கிய ஆஸி..! 214 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை!
அதிமுக விவகாரம்: செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை!
ஈரோடு: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஏற்பாடு செய்த பாராட்டு விழாவில் ஜெயலலிதா, எம்ஜிஆர் படம் இல்லாதது குறித்து அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அத்திக்கடவு - அவினாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகளிடம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில், செங்கோட்டையன் வீட்டுக்கு 2 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வழக்கமாக இரு காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருக்கும் நிலையில், தற்போது மேலும் 4 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு: இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
இந்த நிலையில், அதிமுக இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ள நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் தமது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆதரவாளர்களுடனான ஆலோசனையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எது மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக மூத்த தலைவரான செங்கோட்டையனின் செயல்பாடுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.