ஹஜ் பயணம்: `குழந்தைகளை அழைத்துச் செல்ல தடை' - காரணம் என்ன? - விளக்கும் சவுதி அர...
பாம்பு ஏன் தனது தோலை உரிக்கிறது தெரியுமா? - ஆச்சர்யப் பின்னணி
பாம்பு தனது தோலை உரிக்கும் போது அவற்றைப் பார்த்தால் கொத்துமென்று கேள்விப்பட்டிருப்போம். அது உண்மையா? எதற்காக இவ்வாறு பாம்பு தன் தோலை உரித்துக் கொள்கின்றன என்பது குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.
மனிதர்களிடமும் தோல் உரியும், தினமும் குளிப்பதால் தோல் உரிவதைக் கவனித்திருக்க மாட்டார்கள் பாம்புகளில் பழைய தோல் உரிந்து புதிய தோல் வருவது ஒரே நேரத்தில் நடைபெறுவதால் அது தெரிகிறது என்று பேராசிரியர் மஞ்சுலா பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
பாம்பு தோலை உரிப்பது எப்படி?
தோல் பழையதாகும் போது பாம்பு அசௌகரியமாக உணரும். உடனே தோலை அகற்ற வேண்டும் என்று நினைக்கும்போது ஒரு சொரசொரப்பான இடத்தில் தனது தலையைத் தேக்குமாம். அப்போது தோலில் விரிசல் உண்டாகும் இதனையடுத்து பாம்பு தனது பழைய தோலை உரித்து தன் உடலை வெளியே கொண்டு வருகிறது.
மனிதர்கள் எப்படி வளர்ந்துகொண்டே இருக்கிறார்களோ அதே போல் பாம்பும் உயிர்வாழும் வரை சிறிது சிறிதாக வளர்த்துக்கொண்டே இருக்கும். அப்படி வளரும் போது தோல் இறுக்கமாவதைத் தொடர்ந்து அதனைத் தன் உடம்பிலிருந்து உரித்துக்கொள்ளுமாம். தோல் உரிக்காத பாம்பு வகைகள் இந்த உலகில் இல்லை என்று கூறுகிறார் பேராசிரியர்.
இவ்வாறு தோலை உரித்துக்கொள்வது பாம்புகளை நுண்ணுயிரிகள் மற்றும் மாசுகளில் இருந்து பாதுகாக்க உதவுவதாக அவர் தெரிவிக்கிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/r61xm5yl/hero_image__17_.jpg)
தோல் உரிக்கும்போது அதைப் பார்த்தால் பாம்பு தாக்குமா?
பாம்பு தன் உடலில் உள்ள பழைய தோலை உரித்து புதிய தோலுக்கு மாறும்போது அசௌகரியமாக உணரும். அதற்காக ஒரு இருட்டான இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும், அப்போது அவற்றை யாராவது தொந்தரவு செய்ய நேர்ந்தால் அப்போது அது தாக்கும் என்கின்றனர் வன உயிரியல் ஆய்வாளர்கள்.