செய்திகள் :

மாத்தூர் தொட்டில் பாலத்தில் காமராஜர் கல்வெட்டு உடைப்பு; போலீஸ் விசாரணை!

post image

கன்னியாகுமரி மாவட்டம், அருவிக்கரை ஊராட்சியில் மாத்தூர் பகுதியில் தொட்டில் பாலம் அமைந்துள்ளது. ஒருபுறம் அருவிக்கரை ஊராட்சியையும் மறுபுறம் வேர்கிளம்பி பேரூராட்சியையும் இணைக்கும் வகையில் மாத்தூர் தொட்டில் பாலம் அமைந்துள்ளது. பட்டணம் கால்வாய் அமைக்கும்போது பரளி ஆறு குறுக்கிட்டதால் அந்த ஆற்றின் மீது சுமார் 108 அடி உயரத்தில் சுமார் 1240 அடி நீளத்தில் தொட்டில் பாலம் அமைக்கப்பட்டது.

உடைக்கப்பட்ட காமராஜர் கல்வெட்டு

ஆறும் அதை ஒட்டி நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு ஆசியாவிலேயே அதிக உயரம்கொண்ட தொட்டில் பாலம் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவு மாத்தூர் தொட்டில் பாலத்துக்கு வந்து செல்கின்றனர். மாத்தூர் தொட்டில் பாலத்தின் நுழைவுப்பகுதியில் காமராஜர்  உருவப்படம் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று வைக்கப்பட்டிருந்தது. நேற்று அந்த பகுதி வழியாக சென்ற சிலர் காமராஜர் கல்வெட்டு உடைந்துகிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மாத்தூர் தொட்டில் பாலம்

இது குறித்து தகவல் அறிந்த காங்கிரஸ் கட்சியினர் அங்கு சென்று மறியல் போராட்டம் நடத்தினர். காமராஜர் கல்வெட்டை உடைத்த குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும், உடைக்கப்பட்ட கல்வெட்டு அமைந்திருந்த இடத்தில் மீண்டும் கல்வெட்டை அமைக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சியின் குமரி மேற்குமாவட்ட தலைவர் பினுலால் சிங் தெரிவித்தார். போலீஸார் அங்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை 2 நாள்களில் கண்டுபிடிப்பதாக கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட், கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் ஆகியோரும் கல்வெட்டு உடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

காங்கிரஸ் போராட்டம்

இந்தச் சம்பவம் குறித்து திருவட்டாறு காவல் நிலையத்தில் காங்கிரஸ் குமரி மேற்கு மாவட்ட தலைவர் பினுலால் சிங் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் திருவட்டாறு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். யாராவது வேண்டும் என்றே உடைத்தனரா அல்லது மதுபோதையில் காரில் சென்றவர்கள் மோதினார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாசகம் பெறும் பெண்ணுடன் திருமணம் மீறிய உறவு... கொலையில் முடிந்த சோகம்; இளைஞர் கைது..!

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் கடந்த மாதம் 3 -ம் தேதி திருச்சி டு சென்னை பைபாஸ் சாலையோர முள் புதரில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலம் கிடப்பதாக சமயபுரம் காவல் நிலையத்திற்கு தகவ... மேலும் பார்க்க

விருதுநகர்: நகை, கைத்துப்பாக்கி பிடிபட்ட வழக்கு; போலீஸ்காரர் உட்பட இருவர் கைது!

விருதுநகர் மாவட்டம், வச்சகாரப்பட்டி அருகே நகை, கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பிடிபட்ட சம்பவத்தில் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்க... மேலும் பார்க்க

தென்காசி: அதீத துர்நாற்ற்றம்... புதர் அருகே எரிந்த நிலையில் பெண்ணின் சடலம்! - போலீஸ் விசாரணை

தென்காசி மாவட்டத்தில் உடல் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், " தென்காசியை அடுத்த... மேலும் பார்க்க

கரூர் தண்டவாளத்தில் விரிசல்; ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரின் துரித செயல்; 100 மீட்டர் முன்பு நின்ற ரயில்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள திருக்காம்புலியூர் பகுதியில் கரூர் - திருச்சி ஒருவழி ரயில் பாதையில் ரயில்வே தண்டவாளம் விரிசல் ஏற்பட்டு உடைந்துள்ளது. இந்நிலையில், அதன் அருகே குடியிருந்து வரு... மேலும் பார்க்க

சென்னை: கொலையில் முடிந்த தாய் - மகள் சண்டை; கைதான மகளின் காதலன்; என்ன நடந்தது?

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி (61). இவர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரின் மகள் ரித்திகா. இவர், போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.... மேலும் பார்க்க

குழந்தைகள் கண்முன் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; மும்பையில் பகீர் சம்பவம்; நடந்தது என்ன?

மும்பையில் தனக்குச் சாப்பாடும், தங்க இடமும் கொடுத்த நண்பருக்கு வாலிபர் ஒருவர் துரோகம் செய்துள்ளார்.மும்பை மலாடு மால்வானி காவ்தேவி பகுதியில் வசித்து வந்தவர் ராஜேஷ் சவான். இவரது மனைவி பூஜா. இத்தம்பதிக்க... மேலும் பார்க்க