தமிழகத்திற்கு அண்ணாமலை நிதி பெற்றுத் தரலாமே! - அன்பில் மகேஸ்
ஊட்டி: `விடைத்தாள் இல்லை என தேர்வு ரத்து’ - கலெக்டர் தலைமையில் இயங்கும் பள்ளியின் அவலம்
பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஊட்டியில் தொடங்கப்பட்ட பிரீக்ஸ் மெமோரியல் பள்ளி 150 ஆண்டுகளைக் கடந்து செயல்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு இயங்கும் இந்த பள்ளியில் விடைத்தாள் வாங்க பணம் இல்லாத காரணத்தால் 10- ம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வை ரத்து செய்த விவகாரம் பெற்றோரையும் ஊட்டி மக்களையும் கொத்திப்படையைச் செய்திருக்கிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/3ml2s7p8/IMG-20250211-WA0027.jpg)
இரண்டு தினங்களுக்கு முன்பு பிரீக்ஸ் பள்ளியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லக்ஷ்மி பவ்யா தன்னீரு பங்கேற்றிருந்த நிலையில், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஆட்சியிரடம் இது குறித்து கேள்வி எழுப்பயுள்ளனர். இதை சற்றும் எதிர்பாராத மாவட்ட ஆட்சியர் மழுப்பலான பதிலைச் சொல்லி அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்.
இது குறித்து தெரிவித்த பிரீக்ஸ் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், " பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. விடைத்தாள் வாங்க பணம் இல்லை என கூறுகின்றனர். சேர்க்கை கட்டணமாக வசூலிக்கப்படும் தொகை கோடிக்கணக்கில் உள்ளது. மேலும் ,பள்ளிக்குச் சொந்தமாக தாவரவியல் பூங்கா பார்க்கிங் தலம் மூலம் கிடைக்கும் வருவாயும் உள்ளது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/1regwlnm/IMG-20250211-WA0029.jpg)
ஆனால், விடைத்தாள் வாங்க பணம் இல்லையென கூறப்படுவது அபத்தமாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பள்ளி நிர்வாகம் முறையாக நடைபெறுவதில்லை.
கழிவறைகள் கடும் துர்நாற்றம் வீசுகிறது. வகுப்பறை முன்னால் கழிவுநீர் வழிந்தோடுகிறது. சுகாதாரமற்ற கழிப்பிடத்தை பயன்படுத்தும் மாணவர்களுக்கு தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர். கலெக்டர் தலைமையில் இயங்கும் பழைமை வாய்ந்த பள்ளியின் நிலை வேதனை அளிக்கிறது. கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும்" என்றனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.!