சரியும் Stock Market-ல் முதலீடு செய்வது புத்திசாலித்தனமா? | IPS finance - 136 | ...
மசினகுடி: கட்டுமான பொருட்கள் அனுமதி விவகாரம்; அதிமுக எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு! - என்ன நடந்தது?
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வெளி மண்டல பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வனவிலங்கு பாதுகாப்பு வழிமுறைகளை புலிகள் காப்பக நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/blx328ae/IMG-20250130-WA0074.jpg)
இந்நிலையில், புலிகள் காப்பக வெளி மண்டல பகுதிகளில் உள்ள வனத்துறை சோதனைச் சாவடி வழியாக கட்டுமான பொருட்களை வனத்துறை அனுமதிக்க மறுப்பதாகவும், சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் கூடலூர் எம்.எல்.ஏ ( அ.தி.மு.க) பொன். ஜெயசீலன் தலைமையில் மசினகுடி பகுதியில் கடந்த வாரம் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுகம் எட்டப்படவில்லை.
எம்.எல்.ஏ. பொன். ஜெயசீலன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இணை இயக்குநர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அன்றைய தினம் இரவு வரை இணை இயக்குநர் மற்றும் வனத்துறை பணியாளர்கள் பலரும் பல மணி நேரமாக அலுவலகத்திற்குள் சிறைபிடிக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து நிலைமையை சமாளித்துள்ளனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/ldkqxaqo/IMG-20250210-WA0027.jpg)
எம்.எல். ஏ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வனத்துறை மூலம் காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தற்போது எம்.எல்.ஏ பொன். ஜெயசீலன் மற்றும் அவருடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பலர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளில் பேசியது உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.