DMK: "திமுக ஆட்சியில் அதிக பாலியல் வழக்குகள் பதிவாக இதான் காரணம்..." - அமைச்சர் ரகுபதி சொல்வதென்ன?
அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் கொடுமை, கிருஷ்ணகிரியில் 8ம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவி மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், வேலூரில் ஓடும் ரயில் கர்ப்பிணிப் பெண் மீதான பாலியல் கொடுமை எனச் சமீபத்தில் நிகழ்ந்த பாலியல் குற்றங்கள் பெரும் கண்டனங்களைப் பெற்றிருக்கின்றன.
இந்நிலையில் இன்று (பிப் 10) அண்ணா அறிவாலயத்தில் தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள் குறித்துப் பேசியிருக்கும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "எங்கள் ஆட்சியில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். உண்மையில், எங்கள் ஆட்சியில்தான் பெண்கள் தங்களுக்கு நடந்த கொடுமைகளுக்குத் தைரியமாக முன்வந்து காவல்துறையில் புகாரளிக்கிறார்கள்.
பெண்களின் புகார்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, உடனே எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. எங்கள் ஆட்சியில் நீதி கிடைக்கும் என்று பெண்கள் நம்புகிறார்கள். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளித்தும் எஃப்.ஐ.ஆர் (FIR) உடனே பதிவு செய்யப்படவில்லை. 14 நாட்களுக்குப் பிறகு வந்த அழுத்தத்தினால்தான் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டது.
அ.தி.மு.க ஆட்சியில் புகாரளித்தாலும் நீதி கிடைக்காது, எஃப்.ஐ.ஆர் (FIR) கூட போட மாட்டார்கள் என்ற விரக்தியில் பெண்கள் தங்களுக்கு நடந்த அநீதிகளுக்குப் புகாரளிக்கவில்லை. எங்கள் ஆட்சியில் நீதி கிடைக்கும், யாராக இருந்தாலும் உடனே எஃப்.ஐ. ஆர் (FIR) போடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெண்கள் நம்புகிறார்கள். அதனால் அதிக பாலியல் வழக்குகள் எங்கள் ஆட்சியில் பதிவாகிறது" என்று பேசியிருக்கிறார் அமைச்சர் ரகுபதி.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.