Miruthula Ramesh | Delhi Air Pollution பத்தி தேர்தல்ல ஒரு அரசியல்வாதியும் பேசல.....
Corruption: `லஞ்சம், ஊழல் நிறைந்த நாடுகள்..' -இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா?
2024-ம் ஆண்டிற்கான சர்வதேச ஊழல் குறியீட்டில் (Corruption Perceptions Index - CPI) இந்தியா 96-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. உலக நாடுகளின் ஊழல் லஞ்சம் தொடர்பாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (Transparency International) ஒவ்வோர் ஆண்டும் ஆய்வு மேற்கொள்கிறது. 180 நாடுகளுக்கும் 0 - 100 வரை மதிப்பெண் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் தரவரிசை பிரிக்கப்படுகிறது. 2022-ம் ஆண்டு இந்தியா 40 மதிப்பெண்களையும், 2023-ம் ஆண்டு 39 மதிப்பெண்களையும் பெற்றிருந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான பட்டியல் வெளியாகியிருக்கிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/b29mibwa/vs__11_.jpg)
அதில், இந்தியா 38 மதிப்பெண்களை மட்டுமே பெற்று 93-வது இடத்திலிருந்து 96 வது இடத்துக்கு சரிந்திருக்கிறது. நமது அண்டை நாடுகளான சீனா 76-வது இடத்தையும், பாகிஸ்தான் 135-வது இடத்தையும், இலங்கை 121-வது இடத்தையும், வங்காளதேசம் 149-ம் இடத்தையும் பிடித்திருக்கின்றன. மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் 50-க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.
ஊழல் குறைந்த நாடு என்ற பட்டியலில் டென்மார்க் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து பின்லாந்து இரண்டாம் இடத்திலும், சிங்கப்பூர் மூன்றாம் இடத்திலும் ஆதிக்கம் செலுத்துகின்றன.
உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஊழல் ஒரு ஆபத்தான பிரச்னையாக மாறிவரும் அதே வேளையில், பல நாடுகளில் ஊழலுக்கு எதிராக நல்ல மாற்றமும் ஏற்பட்டு வருகிறது. ஊழல் அதிகமாகுவதற்கு குறைந்து வரும் ஜனநாயகம், உறுதியற்ற தன்மை, மனித உரிமை மீறல்கள் முக்கிய காரணங்களாகும். சர்வதேச சமூகமும், ஒவ்வொரு நாடும் ஊழலைக் கையாள்வதை ஒரு முதன்மையான மற்றும் நீண்டகால முன்னுரிமையாக மாற்ற வேண்டும். சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராடுவதற்கும், அமைதியான, சுதந்திரமான, நிலையான உலகத்தைப் பாதுகாப்பதற்கும் இது மிகவும் முக்கியமானது." எனக் குறிப்பிட்டிருக்கிறது.